Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிறப்பு டெட் தேர்ச்சி மதிப்பெண்: அனைத்துப் பிரிவினருக்கும் 60 ஆக நிர்ணயிக்க ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தல்

hindutamil-prod%2F2026-07-05%2Ftiwznat6%2F12421212 
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்ச்சி மதிப்பெண்ணை அனைத்து பிரிவினருக்கும் 60 ஆக நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் அ.மாயவன், மாநில தலைவர் சி.ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர் மா.குமரேசன் ஆகியோர் கூட்டாக அனுப்பியுள்ள மனுவின் விவரம்:

பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை டெட் தேர்வு எழுதச் சொல்வதும், அத்தேர்வில் ஒரு பிரிவு ஆசிரியர்கள் 150-க்கு 60 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிப்பதும், அதேநேரத்தில் மற்றொரு பிரிவினர் 75 மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி என்பதும், இன்னொரு பிரிவினர் 90 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி என்று அறிவிப்பதும் சமூக நீதிக்கு முற்றிலும் முரண்பட்டது.

ஒரே பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் 60 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைகிறார். மற்றொரு பிரிவு ஆசிரியர் 74 மதிப்பெண் எடுத்தும் இன்னொரு பிரிவு ஆசிரியர் 89 மதிப்பெண் பெற்றும் தேர்ச்சி பெறவில்லை என கூறி அவர்களின் வேலையை பறித்து பதவி உயர்வை உரிமை பறித்து அவரை வீதியில் நிறுத்துவது எந்த வகையில் நியாயம்?

இனசுழற்சி முறைக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்ல. அதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.

இந்த இன சுழற்சி முறையை புதிய நியமனங்களுக்கு கடைபிடிக்க வேண்டுமே ஒழிய, ஏற்கெனவே இனசுழற்ச்சி முறையில் பணியமர்த்தப்பட்டு தொடர்ந்து 10, 15, 20 ஆண்டுகள் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கும் கடைபிடிப்பதை உடனடியாக கைவிட வேண்டும்.

இன சுழற்சி முறையில் நிர்ணயிக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்களான 60, 75, 90 என்பதை மாற்றி அனைத்துப் பிரிவு ஆசிரியர்களுக்கும் டெட் தேர்ச்சி மதிப்பெண் 60 என நிர்ணயிக்க வேண்டும்.

இது தொடர்பான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிட வேண்டும். இந்த புதிய தேர்ச்சி மதிப்பெண்ணை கடந்த அக்டோபர் 12-ம் தேதி வெளியிடப்பட்ட சிறப்பு டெட் தேர்வு முடிவில் இருந்தே நடைமுறைப்படுத்தி மீண்டும் ஒரு திருத்தப்பட்ட டெட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive