Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

MSHM TO BEO ஆக பதவி உயர்வு பெற, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET II தேர்ச்சி ) கட்டாயம் - அரசு நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

 

 MSHM TO BEO ஆக பதவி உயர்வு பெற, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET II தேர்ச்சி ) கட்டாயம் - அரசு நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
 தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி - 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் வட்டாரக்கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களில் 50% பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யும் பொருட்டு, 2026 ஆம் ஆண்டில் 01.01.2026 நிலவரப்படி, TET தேர்வு தேர்ச்சியை நிறைவு செய்யாத நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டுபள்ளிகளைக் கண்டறி
மாநில அளவில்  தகுதிவாய்ந்தோர் பட்டியலானது (Panel List), 
கோருதல் சார்பாக
26-02-2026 ல் தொடக்கக்கல்வி இயக்குநரால் செயல்முறைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் திரு. சா. முத்தமிழ்ச்செல்வன் என்பார் தொடர்ந்த 
WP NUMBER 9859/2026 வழக்கில், மனுதாரரின் பிரதான கோரிக்கையை தமிழ்நாடு அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.

வழக்கின் பின்னணி:

நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராக (BEO) பதவி உயர்வு வழங்கும்போது, RTE ACT 2009 சட்டப்படியும் மற்றும் மற்றும் உச்சநீதிமன்றத்தின் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான 01-09-2025 நாளிட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், TET II தேர்ச்சி பெற்ற நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களைக் கொண்டு மட்டுமே BEO ஆக பதவி உயர்வினை வழங்க வேண்டும் எனக் கோரி மனுதாரர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.பள்ளிகளைக் கண்டறி

அதாவது, UG + B.Ed. + துறைத் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துத் தகுதிகளுடன் TET II தேர்ச்சியும் பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டு மட்டுமே BEO ஆக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பதே மனுதாரரின் பிரதான கோரிக்கையாகும்.


அரசின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் :-

1.இவ்வழக்கு தொடர்பாகப் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் தரப்பில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 29-10-2026 ல் எதிர்மனு (Counter Affidavit) தாக்கல் செய்யப்பட்டுள்ளது

2.அதில், சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை நிலை எண் 87, நாள் 13.03.2026 - ன் படி , நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் இருந்து BEO ஆக பதவி உயர்வு பெறுவதற்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் (TET II தேர்ச்சியையும் சேர்த்து ) பெற்றிருக்க வேண்டும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுப் பயிற்சி

3.மனுதாரரின் பிரதான கோரிக்கையை அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதால், இதற்காகத் தனியாக மற்றுமொரு நீதிமன்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டிய அவசியம் எழவில்லை எனவும் பிரமாணப் பத்திரத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.


இதன் முக்கியத்துவம்:


அதாவது நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நிலையிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெறுவதற்கான தகுதிகளில், TET II தேர்ச்சியும் கட்டாயம் என்பது இதன் மூலம் நடைமுறைக்கு வருகிறது*கல்வி உதவித்தொகை


எனவே, அரசின் இந்த நிலைப்பாட்டை ஏற்று, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இவ்வழக்கை விரைவில் முடித்து வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive