OneZ Quiz App Download

Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

மாணவர்களின் விலையில்லாப் பாடப்புத்தகங்களை எடைக்கு விற்ற தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

  


Headmistress suspended for selling students' free textbooks by weight

மாணவர்களின் இலவச பாடப்புத்தகங்களை எடைக்கு விற்ற தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக புத்தகங்களை விற்பனை செய்ததாக அவர் அளித்த விளக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்ட முதல் பருவ பாடப்புத்தகங்களை திரும்பப் பெற்று, பழைய பேப்பர் கடையில் எடைக்கு விற்பனை செய்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 75-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தற்போது முதல் பருவத்தேர்வு முடிவடைந்து, இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பழைய புத்தகங்களை எடைக்கு விற்பனை

இதற்கிடையே, முதல் பருவத்தேர்வு முடிவடைந்ததும் மாணவர்களிடம் இருந்து அரசு இலவசமாக வழங்கிய முதல் பருவ பாடப்புத்தகங்களை பள்ளியின் தலைமை ஆசிரியை மஞ்சுளா திரும்பப் பெற்றுள்ளார். பின்னர் அந்த புத்தகங்களை பழைய பேப்பர் வியாபாரியிடம் எடைக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

அரசு சார்பில் மாணவர்களின் கல்விக்காக இலவசமாக வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


டெங்கு பரவாமல் தடுக்கவே விற்றதாக விளக்கம்

இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது, பள்ளியில் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், பழைய பாடப்புத்தகங்களை எடைக்கு விற்பனை செய்ததாக தலைமை ஆசிரியை மஞ்சுளா விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.


தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்


இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியை மஞ்சுளாவை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


மாணவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கிய பாடப்புத்தகங்களை திரும்பப் பெற்று விற்பனை செய்த சம்பவம் திருச்சி மாவட்ட கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive