இயல் : அரசியல்
அதிகாரம்:53. சுற்றந் தழால்
குறள் எண்:526
குறள்:
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.
பொருள்:
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.
Trust not broken staff.
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. கொடுத்த நேரத்திற்குள் என் பணிகளைச் செய்து முடித்து, வாழ்க்கையில் நேரத்தை எப்போதும் மதித்துப் நடப்பேன்.
2. வகுப்பறையிலும் பள்ளியிலும் அமைதியைக் காத்து, ஆசிரியர்களின் கற்பித்தலுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.
பொன்மொழி :
எவரது பாராட்டிற்காகவும் கடமையை செய்யாமல் உன் கடமையை நீயே செய். உனது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது உன் எதிரியே உன்னை மதிப்பான் - அண்ணல் அம்பேத்கர்
Thought for the Day :
Every new day is a fresh paper. write something worth reading.
பொது அறிவு :
1.மெட்ராஸ் மாநிலம் உருவான ஆண்டு எது?
ஜனவரி 26 1950.
2.மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு எது?
ஜனவரி 14 1969.
English words :
1. Inevitable - தவிர்க்க முடியாத - Unavoidable
2. Profound - ஆழமான - Deep
புவியியலும் சுற்றுசூழலும் :
2. ஆனைமலை புலிகள் காப்பகம் (இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம்)• அமைவிடம்: கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் (மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி).
• சிறப்பு: 958 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட இது, தமிழ்நாட்டின் மிகப்பெரிய மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட காடுகளில் ஒன்றாகும். பரம்பிகுளம், ஆழியாறு போன்ற முக்கிய அணைகளின் நீர் ஆதாரமாக விளங்குகிறது.
• விலங்கினங்கள்: சிங்கவால் குரங்கு (Lion-tailed Macaque), நீலகிரி வரையாடு, யானைகள், புலிகள் மற்றும் கௌர் (காட்டு எருமை)
NMMS :
MAT
ஒரு எண்ணின் 3 மடங்கிலிருந்து 5-ஐ கழித்தால் 16 கிடைக்கிறது. அந்த எண் என்ன?
A) 5
B) 6
C) 7
D) 8
விடை : (C) 7
விளக்கம்
ஒரு எண்ணின் 3 மடங்கிலிருந்து 5 கழித்தால் 16.
3 × 7 − 5 = 21 − 5 = 16 ✅
நவம்பர் 10
நீதிக்கதை
ஊருக்குத்தான் உபதேசம்!
ஒரு அழகான கிராமத்தில் ராமு என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எப்போதும் மற்றவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறுவதில் வல்லவர். "குழந்தைகளே ! அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். நேரத்தை வீணாக்கக் கூடாது. சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பொய் சொல்லக்கூடாது" என்று தினமும் ஊர் மக்களுக்கு அறிவுரை கூறுவார்.
ஆனால், அவர் மட்டும் அதிகாலையில் எழுந்திருக்க மாட்டார். வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க மாட்டார். நேரத்தையும் வீணடிப்பார். அவர் சொல்வதற்கும் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இருக்காது.
ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு பெரிய அறிஞர் வந்தார். ராமு அவரைச் சந்தித்து,
"ஐயா! நான் தினமும் ஊர் மக்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறுகிறேன். ஆனால் அவர்கள் யாரும் என்னைப் பாராட்டுவதில்லை " என்றார்.
அதற்கு அந்த அறிஞர், "ராமு! நீ மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கு முன்பு, அந்த அறிவுரைகளை உன் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறாயா என்று சிந்தித்துப் பார். நீ சொல்வதை நீயே பின்பற்றவில்லை என்றால், உன் அறிவுரைகளுக்கு எப்படி மதிப்பு கிடைக்கும்?" என்று கேட்டார். அந்த வார்த்தைகள் ராமுவின் மனதைத் தொட்டன.
அன்றிலிருந்து அவர் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதைக் குறைத்துக்கொண்டு, முதலில் தன்னுடைய பழக்கங்களை மாற்றிக்கொண்டார். அதிகாலையில் எழுந்தார். வீட்டைத் தூய்மையாக வைத்தார். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தினார்.
சில நாட்களிலேயே ஊர் மக்கள் அவரிடம் நல்ல மாற்றத்தைக் கவனித்தனர். அவர் சொன்ன அறிவுரைகளை விட, அவருடைய செயல்களே மக்களுக்கு நல்ல பாடமாக அமைந்தன.
நீதி: ஊருக்குத்தான் உபதேசம், நமக்கில்லை என்று வாழக்கூடாது. பிறருக்கு அறிவுரை கூறுவதற்கு முன்பு நாம் அதன்படி நடக்க வேண்டும். சொல்லுவதைக் காட்டிலும் செயல்படுத்திக் காட்டுவதே சிறந்த பண்பாகும்!
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...