Prepared by Mr. P.THIRUKUMARESA KANI M.A, M.Sc., B.Ed.,
தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள்
பற்றாக்குறை நிலவி வருவதாக சர்வே கூறுகிறது.இந்தப் பற்றாக்குறை மாணவர்களின்
ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கின்றது.
தங்கத்தில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு
விரைவில் கொண்டு வர உள்ளது. இதற்கான வரைவு விதிகளை மத்திய நிதியமைச்சகம்
வெளியிட்டுள்ளது.இதன்படி தங்கத்தின் எடைக்கு இணையான
விலை மதிப்புள்ள பத்திரங்களை அரசு வெளியிடும். 2,5,10 கிராம்கள் அல்லது
இதற்கு அதிகமான எடைக்கு இணையான விலையில் இந்த பத்திரங்கள் இருக்கும்.
சர்வதேச தங்கக் கடன் சந்தை நிலவரத்திற்கேற்ப இப்பத்திரங்களுக்கு வட்டி
நிர்ணயிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
உங்கள் வீடுகளில் உள்ள தங்க நகைகள் கூடுதலாக வருமானத்தையும் ஈட்டித்
தந்தால் எப்படியிருக்கும்.ஆம்.அப்படி ஒரு வசதியை மத்திய அரசு
அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன.இதில்
எவ்வளவு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.உள்ளிட்ட விவரங்களை இப்போது
பார்க்கலாம்.
தமிழக அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு இலவசப் பயிற்சியில் சேர
விரும்பும் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.2016-ம்
ஆண்டு நடைபெறவுள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு தமிழக
அரசு மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி
வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிக்க
வேண்டுமென தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம்
கோரியுள்ளது.
மத்திய கல்வி பாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்வி அமைப்பின் கீழ் (Army Welfare Education Society) இந்தியா முழுவதும்
செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள்
பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்
பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்ப தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு ஊழியர்கள் பணிக்காலத் தில் இறந்தால், அவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பணி வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்டவர்
இறந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசுகள் வேலைகேட்டு விண்ணப்பிக்க
வேண்டும் என 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி விண்ணப்பித்தால் உரிய
கல்வி , 18 வயது நிரம்பவில்லை என பல நேரங்களில் விண்ணப்பம் திருப்பி
அனுப்பப்படும். பின் அனைத்து தகுதிகளும் பெற்றவுடன் மீண்டும் விண்ணப்பித்து
வாரிசுகள் அரசு பணி பெற்று வந்தனர்.
உங்களுடைய கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப்
பதிந்துவிட்டீர்களா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரையும் அதில் உள்ள
இணைய இணைப்பினையும் விண்டோஸ் 10 சிஸ்டம் நீங்கள் அறியாமலேயே பயன்படுத்திக்
கொண்டிருக்கும். அதன் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களுக்கு, விண்டோஸ்
10 அப்டேட் பைல்களை அனுப்பிக் கொண்டிருக்கும். இதனை மைக்ரோசாப்ட்
“விண்டோஸ் வழங்குவதில் அதிக பட்ச பயன்பாடு” (Windows Update Delivery
Optimization (WUDO) என அழைக்கிறது. இந்த தகவலை, மைக்ரோசாப்ட் நிறுவனம்,
தன் விண் 10 குறித்த கேள்வி பதில்
(http://windows.microsoft.com/en-us/windows-10/windows-update-delivery-optimization-faq)
பகுதியில் தெரிவித்துள்ளது.
திருச்செங்கோட்டில் ஆசிரியரைத் தாக்கிய போக்குவரத்துக் காவல் உதவி
ஆய்வாளரைக் கண்டித்து, ஆசிரியர்கள், மாணவர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில்
ஈடுபட்டனர்.
பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொது இடங்களில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 533
மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மாவட்ட வன அலுவலர் நிகார்
ரஞ்சன் கூறினார்.
Family Pension for NPS Employees – A
report states that between April 1994 and April 2004, more than 50 lakh
youths joined Government Services. However, the same dropped to around
33 Lakhs after April 2004. Experts blame the Governments’ decision to
abolish pension for this, which forced the youths to move towards the
corporate sector.
ஆசிரியர்
கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். படிப்பில் 2015-16
கல்வியாண்டில் சேருவதற்கு 1,136 பொறியியல் பட்டதாரிகள்
விண்ணப்பித்துள்ளனர்.பி.எட்.
படிப்பில் பி.இ. பட்டதாரிகள் சேர்க்கப்படுவது இந்தியாவில் இதுவே முதன்
முறையாகும். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய
2014 வழிகாட்டுதலின்படி, பி.இ. முடித்தவர்கள் முதன் முறையாக பி.எட்.
படிப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
பதினெட்டு வயது பூர்த்தியான புதிய
வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்கவும்,
விடுபட்டோர் தங்கள் பெயரை பட்டியலில் இணைத்துக் கொள்ளவும், வாக்காளர்
பட்டியலில் பெயர், முகவரி திருத்தம் செய்யவும், வரும் அக்., மாதம் 20ம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதற்காக
பொதுமக்கள் வீணாக அலையாமல், எங்கு செல்ல வேண்டும், என்ன படிவம், என்ன
ஆவணங்கள் இணைத்து தர வேண்டும் என்பதையும், தேர்தல் கமிஷன் விளக்கமாக
தெரிவித்துள்ளது.
மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி
தேர்வில் நீக்கப்பட்ட, 914 பட்டதாரிகளின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., ஏற்றுக் கொண்டுள்ளது. எழுத்து
தேர்வு:தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில், மகப்பேறு மற்றும்
குழந்தை நல அதிகாரி பதவியில், 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி.,
சார்பில் நாளை, எழுத்துத்தேர்வு நடக்கிறது.
ரயில் டிக்கெட்டை, 'ஆன்-லைன்' மூலமாக
முன்பதிவு செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை,
நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.அதிகாலை, 12:30 மணி முதல் இரவு, 11:30
மணி வரை, ரயில் டிக்கெட்டை இணையதளம் வாயிலாக, முன்பதிவு செய்யும் வசதி,
2010, ஏப்ரல் முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், முன்பதிவு செய்யும்
நேரத்தை மேலும், 15 நிமிடங்கள் அதிகரித்து, ரயில்வே வாரியம்
அறிவித்துள்ளது.
உலக இன்ஜினியரிங் பல்கலைகள் தரவரிசை
பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கு, 151வது இடம் கிடைத்துள்ளது.
'பிரிக்ஸ்' நாடுகள் பட்டியலில், சென்னை பல்கலை, 78வது இடத்தை
பிடித்துள்ளது.
அரசு ஊழியர்கள் பணிக்காலத் தில் இறந்தால், அவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பணி வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்டவர்
இறந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசுகள் வேலைகேட்டு விண்ணப்பிக்க
வேண்டும் என 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி விண்ணப்பித்தால் உரிய
கல்வி , 18 வயது நிரம்பவில்லை என பல நேரங்களில் விண்ணப்பம் திருப்பி
அனுப்பப்படும். பின் அனைத்து தகுதிகளும் பெற்றவுடன் மீண்டும் விண்ணப்பித்து
வாரிசுகள் அரசு பணி பெற்று வந்தனர்.
நமது வலைதளத்தில் வெளியிடப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதியம்
சார்ந்த செய்தி
சார்ந்து… தமிழ்நாடு
ஆசிரியர் கூட்டணியின்
தலைமை நிலைய
செயலாளர் திரு,க.சாந்தகுமார்
என்பார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
தான் இப்பொருள்
சார்ந்து இயக்குநரை
சந்திக்கவில்லை என்றும் முழுக்க முழுக்க தவறாக
என் பெயரை
பயன்படுத்தி செய்தி வெளியிடப்பட்டுள்ளது
என்றும் தெரிவித்தார்.
Prepared by Mr. S. Nagarajan,

ஆதார் அட்டை
வைத்திருப்போர் இ-சேவை மையங்களில் தங்களது இ-மெயில் மற்றும் செல்போன்
எண்களை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தலைமைச்யெலகம், 264 வட்டாட்சியர்
அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15
மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை மற்றும் மதுரை
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 337 இடங்களில் அரசு இ-சேவை
மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 1.6.2009 ல் அரசு ஆணை 234
மூலம் 6 வது ஊதிய குழு ஊதியம் நடைமுறை படுத்தப்பட்டது .அப்போது இடைநிலை
ஆசிரியர்களுக்கு பெற்று வந்த ஊதியத்தை விட ரூ .370 குறைவாக நிர்ணயம்
செய்யப்பட்டது .மேலும் தற்காலிக தீர்வாக அரசு ஆணை 258 ன் மூலம் 1.1.2006
முதல் 1.6.2009 முன்னர் நியமனம் பெற்றவைகள் மட்டும் 1.86.ஆல் பெருக்கி
ஊதியம் நிர்ணயம் செய்திட அனுமதி வழங்கப்பட்டது.
ஆதார் அட்டை பெறுவதற் கான பணிகளை விரைவுபடுத்து வதற்கு தமிழகத்தில் கூடுத
லாக 200 பணியாளர்கள் ஆதார் மையங்களில் நியமிக்கப் பட்டுள்ளனர்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் 63 புதிய படிப்புகள்
அறிமுகப்படுத்தப்படுவதாக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன்
தெரிவித்தார்.சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
1. அனைத்து ஆசிரியர்களுக்கும் முதலுதவி பற்றிய பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.2. வழக்கமான பயிற்சி முறைகளில் ஆசிரியர் முதலுதவி பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.3. ஆசிரியர்கள் அடிப்படையான இதயம் மற்றும் நுரையீரலுக்குரிய சுவாச மீட்சி சிகிச்சை கற்றிருக்க வேண்டும்.
கல்வியே சிறந்த செல்வம் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அது கொடுக்கக்
கொடுக்கக் குறைவுபடாhiதது; நெருப்பாலும், நீராலும் அழியாதது; திருடரால்
களவாடப்பட முடியாதது. "கல்வியா? செல்வமா? வீரமா?' என்ற கேள்விகளில் முதலில்
நிற்பது கல்வியே.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய 64 ஆவணங்களை மேற்கு வங்க காவல்துறை
வெளியிட்டு வருகிறது. கொல்கத்தாவில் உள்ள காவல் துறை அருங்காட்சியகத்தில்
நேதாஜி பற்றிய ஆவணங்களை அதிகாரிகள் வெளியிட்டு வருகின்றனர்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கான குறைந்த பட்ச
காப்பீட்டுத்தொகை 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
கடந்த 17 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்த கங்களை
வழங்கியும், அறநெறி வகுப்புகளை நடத்தியும் மாணவர் களிடையே
நற்கருத்துகளைப்போதிக்கும் பணியில் ஈடுபட்டுள் ளார் திருச்சியைச் சேர்ந்த
கரு.பேச்சிமுத்து (73).
திருச்சி திருவெறும்பூர் அருகே
யுள்ள குமரேசபுரத்தில் வசிக்கும் இவர், பெல் நிறுவனத்தில் முது நிலை
மேலாளராகப் பணியாற்றியவர்.
இந்தியாவில் 68 ஆயிரம் கிராமங்களை இணைக்கும் வகையில் 90 ஆயிரம் கிலோ
மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிழை குழாய் பாதை கட்டமைப்பு
ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர்
பிரசாத் தெரிவித்துள்ளார்.