உடற்கல்வி முதல் பருவ தேர்வுக்கான - மாதிரி வினா தாள்கள் இங்கு வழங்கப்பட்டு உள்ளது.
Thanks to Mrs. G. AMBIGA, P.E.T
GHSS, Melattur,
"தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தச்
மாணவ, மாணவியர் தங்குதடையின்றி கல்வியறிவை பெறும் வகையில், முதல்வர்
ஜெயலலிதா, 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதை, மாணவ, மாணவியர்
பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என அமைச்சர் வைத்திலிங்கம் பேசினார்.
மாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வந்தால், "சஸ்பெண்ட்" நடவடிக்கை எடுக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில்
தொங்கல் பயணம் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. இதனை கட்டுப்படுத்த
அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காததால், விபத்துக்களும் தொடர்கதையாகி
வருகிறது.
"ஆண்டுக்கு 55 லட்சம் மாணவர்கள் இங்கு படித்து
பட்டம் பெறுகின்றனர். இவர்களில் 12 முதல் 15 சதவீதம் பேர் மட்டுமே, வேலை
வாய்ப்புக்கு தகுதியானவர்களாக உள்ளனர்" என, இந்திய தொழில்கள் கூட்டமைப்பின்
கோவை மண்டல தலைவர் சுந்தரராமன் பேசினார்.
சூரிய ஒளிப்பிழம்பின் ஒரு பகுதியான புற ஊதாக்
கதிர்வீச்சைத் தடுத்து நிறுத்தி, புவியைக் காத்து வரும் வளையமே ஓசோன்
படலம். கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ., முதல் 50 கி.மீ., வரை உள்ள
"அடுக்கு வாயு மண்டலத்தில்" தான் ஓசோன் உள்ளது.
அமெரிக்காவிலிருந்து 36 ஆண்டுகளுக்கு முன் விண்ணில் செலுத்தப்பட்ட, "வாயேஜர்-1" விண்கலம், சூரிய மண்டலத்தை தாண்டி பயணித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க,
நடுநிலைப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், கழிப் பறை மற்றும்
வகுப்பறைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களே சுத்தப்படுத்தும்
அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வழக்கு தொடுத்த 1,528 ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே பணப்பலன் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொழிலாளர் வைப்பு நிதி கழகத்தின், டிரஸ்டிகளின்
மத்திய வாரிய கூட்டம், அடுத்த மாதம், 4ம் தேதி நடக்குமென தெரிகிறது.
இதில், வருங்கால வைப்பு நிதி முதலீட்டின், நடப்பாண்டுக்கான வட்டி விகிதம்
முடிவு செய்யப்படுகிறது.
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள்
மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி
அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன்
தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை
அதிகமாக நாம் காண முடிவதில்லை.
நெல்லை மாவட்டத்தில் நாளை (16ம் தேதி) பள்ளிகள் அனைத்தும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக, நடப்பு
கல்வியாண்டில், நேரடி கல்வி முறையில், எம்.பில்., மற்றும் பி.எச்டி.,
பட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி
படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள், தொலைதூர கல்வி முறையில்
படிக்கின்றனர்.
"நெட்" தகுதி தேர்வில் நடந்த குளறுபடிக்கு, யு.ஜி.சி.,யின் தெளிவில்லாத
விளம்பரமே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து,
யு.ஜி.சி., மீது வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
"நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதில்
எந்தவிதமான சிக்கலும் இல்லை" என, சமீபத்தில், அமெரிக்காவில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எம்.ஐ.டி., அண்ணா பல்கலை ஆராய்ச்சி மாணவர்களின் கண்டுபிடிப்பான
ஆளில்லா உளவு ஹெலிகாப்டரை போல, தமிழக போலீஸ் துறையில் பயன்படுத்துவதற்காக,
மூன்று ஹெலிகாப்டர்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறைக்கு, கூடுதல்
பொறுப்பேற்றுள்ள, அமைச்சர் பழனியப்பன், துறை செயல்பாடு குறித்து,
அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில், புதிதாக, 14 கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, "வீடியோ கான்பரன்ஸ்" மூலம்
துவக்கி வைத்தார். இக்கல்லூரிகளில், 210 ஆசிரியர் பணியிடம், 238 ஆசிரியர்
அல்லாத பிற பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு கம்ப்யூட்டர்
அறிவியல் பி.எட். பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர்
ஜி.முத்துராமன் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை மனு தாக்கல் செய்தார்.
மதுரை அருகே உள்ள டி. கல்லுப்பட்டியில் இயங்கி
வரும் காந்தி நிகேதன் பள்ளியை, நாட்டில் பாரம்பரியத்தைப் பின்பற்றும் ஐந்து
பள்ளிகளில் ஒன்றாக என்சிஇஆர்டி தேர்வு செய்துள்ளது.
பள்ளி கல்வித்துறைக்கு, கூடுதல் பொறுப்பேற்றுள்ள, அமைச்சர் பழனியப்பன்,
துறை செயல்பாடு குறித்து, அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.
நேர்முகத் தேர்வு அல்லாத குரூப்-2 தேர்வு முடிவை வெளியிடக் கோரி,
தேர்வெழுதியவர்கள், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.
நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு
(Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால்,
பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான் கார்டு பற்றிய
விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலையில்
அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. நகரம் மற்றும் அக்கம் பக்கம் கிராமப்
புறத்தைச் சேர்ந்த சுமார் 1200 மாணவ மாணவியர் அங்கு பயின்று வருகின்றனர்.
இதன் தலைமை ஆசிரியர் ஜிந்தா மதார் பக்கீர். தற்போது பள்ளியில் காலாண்டு
தேர்வு நடைபெற்று வருகிறது.
தனக்கான வெளிநாட்டுப் பல்கலையை ஒரு மாணவர்
தேடும்போது, கல்வி அனுபவத்திற்கு அப்பாற்பட்டு, தான் விரும்புவது எங்கு
கிடைக்கும் என்பதைப் பற்றி தெளிவாக இருக்க வேண்டும். எனவே, அதற்கு
ஏற்றாற்போல், அவர் தனக்கான பல்கலையைத் தேர்வு செய்ய வேண்டும்.
தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டம் 17.09.2013 அன்று SIEMET கூட்டரங்கில் நடைபெறுகிறது
2011-12 ஆம் ஆண்டிற்கான அரசு உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப்
பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்த
சந்தா, அரசு பங்களிப்பு அடங்கிய கணக்குத்தாட்கள் விவரம் சம்பந்தப்பட்ட அரசு
சார் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிதித்துறை, 2013ல் வெளியிட்ட, அரசாணை எண்,
263ல், "தமிழ் பண்டிட்" என்ற வார்த்தையால், தர ஊதியம் பெறுவதில், பட்டதாரி
தமிழாசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதை மாற்றம் செய்ய வேண்டும்
என தமிழக தமிழாசிரியர்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் காலாகாலமாக மாதா, பிதா, குரு,
தெய்வம் என்ற வரிசையில்தான், முதலில் தாய்–தந்தை, அடுத்தது ஆசிரியர்கள்,
அதன்பிறகுதான் தெய்வம் என்று வணங்கினர்.
மழை காரணமாக, குறிபிட்ட சில மாவட்டங்களில்,
விடுமுறை அறிவித்தால், அந்த மாவட்டங்களில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு, புதிய கேள்வித்தாள் தயாரித்து, தேர்வை நடத்துவது குறித்து,
சி.இ.ஓ.,க்களே முடிவெடுத்து, செயல்படுத்தலாம் என, தேர்வுத் துறை
வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும், பரவலாக மழை பெய்து வருகிறது.
வட மாவட்டங்களில், விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்
மாவட்டங்களுக்கு, மழை காரணமாக, நேற்று விடுமுறை. ஆனால், பிற மாவட்டங்களில்,
10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்றைய காலாண்டு தேர்வுகள்,
வழக்கம் போல் நடந்தன. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில்,
புதிய கேள்வித்தாள்கள் அச்சிடப்பட உள்ளன.
உதவி பேராசிரியர் பணிக்கு, சென்னையில்,
செப்.,16 முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்க உள்ளது. தமிழக அரசு
கலைக் கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 15
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம்
திட்டத்தின்படி அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி
அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்கள், தொடக்க, பள்ளிக் கல்வி
இயக்ககங்களில் பதிவேடுகள் தயார் செய்து பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் ஒரு நாள் முழுவதும் பள்ளியில் தங்கி ஆண்டாய்வு மேற்கொள்ள
வேண்டும் என உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு
/ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றி 1.6.1988 முதல் 31.12.1995
வரையிலான காலத்தில் தேர்வுநிலை / சிறப்புநிலை எய்தி ஓய்வுபெற்ற இடைநிலை
ஆசிரியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தொ.ப.த.ஆ பணிநிலையில் தேர்வுநிலை /
சிறப்புநிலை ஆணை வெளியிட்டதை இரத்து செய்து, தீர்ப்பாணை பெற்ற 1528
நபர்களுக்கு மட்டும் பொருந்தும் என உத்தரவு
பள்ளிக்கல்வி - பள்ளிகளில் தேசிய பார்வையற்றோர் சங்கம் மூலம் பள்ளிகளில் நிதி திரட்ட அரசு அனுமதித்து ஆணை
ஆசிரியர் கல்வி -
அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர்
பயிற்சி நிறுவனங்கள், அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்
மற்றும் தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் தொடக்கக்
கல்வி பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு பணிமுன் பயிற்சி வகுப்புகளுக்கான
அறிவுரை வழங்கி SCERT உத்தரவு
பிளஸ்-2 விடைத்தாள் களை மதிப்பீடு செய்ய
அனுபவம் மிக்க ஆசிரியர்கள் வரவேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர்
கு.தேவராஜன் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்ப உள்ளார்.
பணியிடத்தில் ஊழியர் எவரேனும் மாரடைப்பால்
இறக்க நேரிட்டால், அதை தொழில்சார்ந்த மரணமாகவே கருதவேண்டும் என்று மும்பை
உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து,
ஓட்டுச்சாவடி மைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க தேர்தல்
கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அக்.,1ல் சட்டசபை தொகுதி வாரியாக வரைவு வாக்காளர்
பட்டியல் வெளியிடப்படுகிறது.
தேர்வுத்துறை தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை ஒரே நாளில் தீர்ப்பதற்காக நவீன வசதிகள் கொண்ட தகவல் மையத்தை தேர்வுத் துறை அமைக்க உள்ளது.
மதிப்பெண் பட்டியலை தொலைத்துவிட்டு, புதிய மதிப்பெண் பட்டியலுக்காக,
நீண்ட காலம் காத்திருந்த மாணவர்களில், 20 ஆயிரம் பேருக்கு, ஒரே மாதத்தில்,
புதிய மதிப்பெண் பட்டியலை வழங்கி, தேர்வுத்துறை சாதனை படைத்துள்ளது.
தொழில்நுட்பத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள்
மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு (Annual Inspection), பள்ளிகள்
பார்வை (School visits) குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர்
உத்தரவு
இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு
இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆரூண்
எம்.பி. பாராளுமன்றத்தில் பேசும்போது எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி.
படிப்பிற்கு வருடத்திற்கு கட்டணமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை
வசூலிக்கிறார்கள்.
கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (12-09-2013) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு முதல் 'ஓபன் புக்' எனப்படும் திறந்த புத்தக தேர்வு முறையின்படி பாடம் நடத்தப்பட உள்ளது.
துணைவணிக அதிகாரி நகராட்சி கமிஷனர், சிறைத்துறை
நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட 1064 காலியிடங்களூக்கு டி.என்.பி.எஸ்.சி
குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.
பத்தாம் வகுப்பு, இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவு, நாளை வெளியிடப்படுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை
பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு நடந்த தேர்வில், அச்சுப்பிழை உள்ள
கேள்விகளை பார்த்த, மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி எஸ்.நாகமுத்து, "தமிழை
செம்மொழியாக அறிவித்த நிலையில், அச்சுப்பிழையுடன் வினாத்தாள்
தயாரித்திருப்பதை, ஏற்க முடியாது; தேர்வு முடிவு வெளியிட, தடை
விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.
தனித்தேர்வு கட்டணங்களை, வங்கியில் செலுத்தும்
முறையில் உள்ள, சிரமங்களை நீக்கி, நேரடியாக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும்
உள்ள, பணியாளர்களிடம் வழங்குவதற்கு, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன்,
அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
பி.எட்., கல்லூரிகளில் மாணவர் மற்றும்
ஆசிரியர்கள் வருகை பதிவு விபரங்களை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கு,
தினமும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, அப்பல்கலை துணைவேந்தர்
விஸ்வநாதன் தெரிவித்தார்.
நள்ளிரவு முதல் கனமழை தொடர்வதால் சென்னை,
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டத்திலுள்ள பள்ளி,
கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை 21ஆம் தேதி தமிழ் தேர்வு நடைபெற்றது.
2013-14ஆம்
கல்வியாண்டில் 54 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்க, பள்ளிகளின் பெயர்
பட்டியல் முன்னுரிமை அடிப்படையில் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர்
உத்தரவு.
தொடக்கக்
கல்வி - EMIS - மாணவர்களின் விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய குறைகளை
உடனுக் -குடன் நிவர்த்தி செய்ய மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மாநில
ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ள இயக்குநர் உத்தரவு
பள்ளிக்கல்வி
- தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி அலுவலகங்களிலும்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம்
திட்டத்தை" ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்தி தமிழக அரசு
உத்தரவு
"நாட்டில், அதிகமானோர் கல்வியறிவு பெற்றுள்ள
மாநிலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த கேரளாவைப் பின்னுக்குத் தள்ளி,
திரிபுரா மாநிலம், முதல் இடத்தை அடைந்து உள்ளது" என அம்மாநில மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் முதல்வர், மாணிக் சர்க்கார் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில், பர்கூர், கடம்பூர்
மலைப்பகுதி மக்களுக்கு, சான்றிதழ் கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டுமென, மலைவாழ் மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டுறவு துறையில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு,
நியமன ஆணை பெற்றும், ஆறு மாதமாக பணியில் சேர முடியாமல், 150 பேர்,
அவதிப்பட்டு வருகின்றனர்.
படியுங்கள் படித்தபின் ஷேர் செய்யுங்கள்.
யாராவது ஒரு மாணவரோ / மாணவியரோ இதன் மூலம் பயன் பெற வாய்ப்பு உண்டு.
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய
அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்
முகவரி,மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம்
ஏற்பட்டால்,அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்யமுடியும்.
ஒரு வழக்கறிஞர் தவறு செய்தால் அவரை பூமியில்
இருந்து ஆறடி உயரத்தில் தொங்கவிட்டு விடலாம். ஒரு டாக்டர் தவறு செய்தால்
அவரை பூமியில் இருந்து எட்டடி பள்ளத்தில் புதைத்து விடலாம். ஆனால் ஒரு
ஆசிரியர் தவறு செய்தால்? எட்டின அளவுக்கு எதிர்கால சந்ததிகள்
பாதிக்கப்படுவர்.
தற்போது நமது துணை வலைதளமான www.TrbTnpsc.com - ல் ஆசிரியர் தகுதித் தேர்வு TNTET - 2013 தாள் 1 மற்றும் தாள் 2 - ல் பணி கிடைக்க வாய்ப்புள்ள குறைந்த பட்ச மதிப்பெண்கள் எவை? என்பது குறித்த கருத்து கணிப்பு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது:
ஐகோர்ட்டு உத்தரவு
காலாண்டு தேர்வை தொடர்ந்து, அந்த நாட்களில், ஆசிரியர்கள்,
தலைமையாசிரியர்கள் விடுமுறை எடுக்க, பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் தடை
விதித்துள்ளார்.
மாணவர்களுக்கு செல்போன் போன்ற நவீன கருவிகளைப்
பயன்படுத்தி கற்பித்ததற்காக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி
ஆசிரியர் எஸ்.திலீப்புக்கு நல்லாசிரியர் (ஐ.சி.டி.) விருதை குடியரசுத்
தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை வழங்கினார்.
கடந்த ஆண்டு, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி
பெற்று, சான்றிதழ்களை சமர்ப்பிக்காத மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில்
பங்கேற்காதவர்களுக்கு, கடைசி வாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில்,
நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியது.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி காலியிட
விபரங்களை, இணைய தளத்தில் வெளியிடவேண்டும் என, மாணவர் மற்றும் பெற்றோர்
நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
"வாழ்கை பாதையில் வெற்றி என்ற இலக்கை அடைய,
ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை மனதைரியம் மிகவும் அவசியம்" என முன்னாள்
ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.
எம்ஃபில் படிப்புக்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்கலாம் என்ற உத்தரவு
அனைத்து ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உத்தரவிட்டது.
செப்டம்பர் 2013-ல் நடைபெறவுள்ள இடைநிலைத் தேர்விற்கு (10ம் வகுப்பு) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து தேர்வுத்துறையால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
23.09.2013 -- MONDAY -- LANGUAGE PAPER – I
24.09.2013 -- TUESDAY -- LANGUAGE PAPER – II