பொதுப் பாடத்திட்டமாக பெயர் மாறிய சமச்சீர் பாடத்திட்டம்! சமச்சீர் பாடத்திட்டம் என்ற பெயரை, பொது பாடத்திட்டம் என மாற்றி, முப்பருவத் தேர்வு முறையிலான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
கடந்த கல்வியாண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. புதிய புத்தகங்கள் அச்சிடப்பட்டிருந்த நிலையில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.
புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு, தவறுகள் இருந்த பகுதிகளில் ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து, 2011-12 கல்வியாண்டில் சமச்சீர் பாடத்திட்ட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கியது.
"மாணவர்களின் புத்தகச் சுமையை குறைக்கும் வகையில், 2012-13ம் கல்வியாண்டு முதல், முப்பருவத் தேர்வு முறை கொண்டுவரப்படும்,&'&' என முதல்வர் அறிவித்தார். தேர்வு முடிந்து புதிய கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில், முப்பருவத் தேர்வு முறையில் புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. சமச்சீர் புத்தகத்தில் ஏற்கனவே "ஸ்டிக்கர்" ஒட்டி மறைத்த பிழைகள் அனைத்தும் திருத்தப்பட்டன.
கடந்த கல்வியாண்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தக முன்பக்க அட்டையில், "சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட நூல்" என்றிருந்ததை, தற்போது, "பொது பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட நூல்" என, பெயர் மாற்றம் செய்து அச்சிடப்பட்டுள்ளது.
Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive