வரும் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். படிப்புகளில் இரண்டாம் ஆண்டில் நேரடியாகச் சேர்வதற்கு மே 21-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ முடித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்காக இந்த விண்ணப்பங்கள் விற்கப்படுகின்றன.
பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் என தமிழ்நாடு முழுவதும் 34 மையங்களில் இந்த விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 300.
இந்தத் தொகையை 'The Secretary, Second year B.E./B.Tech. Degree Admissions 2012, Alagappa Chettiar College of Engineering and Technology, Karaikudi - 630004' என்ற பெயரில் காரைக்குடியில் செல்லத்தக்க டி.டி.யாக எடுத்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடி, அருந்ததியின மாணவர்கள் தங்களது ஜாதி சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகலை ஒப்படைத்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Secretary, Second year B.E./B.Tech. Degree Admissions 2012, Alagappa Chettiar College of Engineering and Technology, Karaikudi - 630004.
இந்தப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2-வது வாரத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும். இதற்கான அழைப்புக் கடிதம் உரியவர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்ப விற்பனை மையங்கள்: சென்னை - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், கிண்டி, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, புரசைவாக்கம்.
காஞ்சிபுரம் - பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரி, காஞ்சிபுரம்.
திருவள்ளூர் - ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, திருப்பாச்சூர், திருவள்ளூர் மாவட்டம்.
அரியலூர் - பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, அரியலூர்.
கோவை - அரசினர் பொறியியல் கல்லூரி, கோவை, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை.
கடலூர் - முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி, அண்ணாமலை நகர்.
தருமபுரி - தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் கல்லூரி, பாலக்கோடு.
திண்டுக்கல் - பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
ஈரோடு - ஐ.ஆர்.டி.டி., (இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோட் அண்ட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி), ஈரோடு.
கன்னியாகுமரி - அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, நாகர்கோவில்.
கரூர் - எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி, கரூர்.
கிருஷ்ணகிரி - அரசினர் பொறியியல் கல்லூரி, பர்கூர்.
மதுரை - தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, மதுரை.
நாகப்பட்டினம் - வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம்.
நாமக்கல் - பாரத் பாலிடெக்னிக் கல்லூரி, நாமக்கல்.
உதகமண்டலம் - அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, உதகமண்டலம்.
பெரம்பலூர் - தந்தை ரோவர் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடெக்னிக் கல்லூரி, பெரம்பலூர்.
புதுக்கோட்டை - அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, அறந்தாங்கி.
ராமநாதபுரம் - சையது அம்மாள் பொறியியல் கல்லூரி, ராமநாதபுரம்.
சேலம் - அரசினர் பொறியியல் கல்லூரி, சேலம்.
சிவகங்கை - அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி, காரைக்குடி.
தஞ்சாவூர் - பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம்.
தேனி - தேனி கம்மாவர் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரி, தேனி.
திருவாரூர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாலிடெக்னிக் கல்லூரி, திருவாரூர்.
தூத்துக்குடி - அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, தூத்துக்குடி.
திருவண்ணாமலை - எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை.
திருநெல்வேலி - அரசினர் பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி.
திருச்சி - அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, திருச்சி.
திருப்பூர் - ஏஞ்சல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, உகயனூர்.
வேலூர் - தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, வேலூர்.
விழுப்புரம் - ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, விழுப்புரம்.
விருதுநகர் - வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரி, விருதுநகர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...