மே 15ம் தேதி முதல் மருத்துவ விண்ணப்பங்கள்

      இந்தக் கல்வியாண்டில்(2012), மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. இத்தகவலை, மக்கள் நல்வாழ்வு அமைச்சர் விஜய் தெரிவித்தார்.
          இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது: தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பாரிமுனை பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் இந்த விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பமாகவே வழங்கப்படும்.
இந்தாண்டு, முதல் தவணையாக 30,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. பின்னர், தேவைக்கேற்ப அச்சிட்டுக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive