பள்ளிக் கல்வித் துறையில், 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றப் பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும், சி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ.,க்கள், பணியிட மாற்றப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ரெகுலர் (பள்ளிக் கல்வித்துறை) சி.இ.ஓ., பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ., பணியிடங்களில், 23 இடங்கள் காலியாக இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பல அதிகாரிகள், கூடுதலாக ஒரு பொறுப்பையும் சேர்த்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. மாவட்டக் கல்வி அலுவலர்களில், பணிமூப்பு அடிப்படையில், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு அளித்து, காலியாக உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிகள் திறப்பதற்குள், பணியிடங்களை நிரப்பினால் தான், மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
2nd Mid Term Exam 2026
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection
Home »
» முதன்மைக் கல்வி அலுவலர்கள் 20 பேர் அதிரடி மாற்றம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...