60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

பிஎஸ்சி மாணவர்கள் எம்இ படிக்கலாம்!


பிஎஸ்சி படித்த மாணவர்கள் உதவித் தொகையுடன் ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு எம்இ கம்ப்யூட்டர் சயின்ஸ்  படிப்பை படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (பிட்ஸ்) கல்வி நிறுவனத்தின் ஹைதராபாத் வளாகம். இளநிலை அறிவியல் பட்டப் படிப்பை படித்து எம்இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.


நாட்டில் பொறியியல் படிப்பை வழங்கும் முக்கியக் கல்வி நிறுவனம் பிட்ஸ் என்று அழைக்கப்படும் பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனம். இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஹைதராபாத் வளாகத்தில் எம்.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் (இன்பர்மேஷன் செக்யூரிட்டியில் சிறப்புப் படிப்புடன்) தொடங்கப்பட்டுள்ளது. இது நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு. கணிதம், இயற்பியல் ஆகிய படிப்புகளை ஒரு பாடமாகவும் இவை இரண்டில் ஒரு பாடத்தை முக்கியப் பாடமாகவும் எடுத்துப் படித்து பிஎஸ்சி பட்டம் பெற்றவர்கள் இந்தப்படிப்பில் சேரலாம். அத்துடன், பிஎஸ்சி பட்டப் படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும். பிலானி, கோவா, ஹைதராபாத், சென்னை, தில்லி, பெங்களூரு, கொல்கத்தா, நாக்பூர், நொய்டா ஆகிய இடங்களில் வரும் ஜூன் 7, 8 தேதிகளில் இந்த நுழைவுத் தேர்வை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு இரண்டரை மணி நேரம் நடைபெறும். கணிதத்தில் 30 வினாக்களும் இயற்பியலில் 30 வினாக்களும் ஆங்கில மொழித் திறனை சோதனை செய்து அறியும் வகையில் 20 வினாக்களும் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் அப்ஜெக்ட்டிவ் முறையில் இருக்கும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் தேர்வு என்பதால், வினா வங்கித் தொகுப்பிலிருந்து ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொருவிதமான கேள்விகள் இருக்கும். கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை ஜூன் 2ம் தேதியிலிருந்து ஜூன் 5ம் தேதி வரை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு ஹால் டிக்கெட் அவசியம் தேவை. ஆன்லைன் மூலம் தேர்வு நடந்தாலும் தேர்வு குறித்து ஏதாவது எழுதிப் பார்க்க வேண்டியிருந்தால் தேர்வு அறைக்கு பேனா கொண்டு வர வேண்டியது அவசியம். நெட் ஒர்க் இணைப்பு இல்லாத கால்குலேட்டர்களைக் கொண்டு வரலாம். மொபைல் போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்களைக் கொண்டு வர அனுமதி இல்லை. தேர்வு மையங்களில் கண்காணிப்புக்காக சர்கியூட் டிவி இருக்கும்.

இந்தப் படிப்பில் சேரத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு டீச்சிங் அசிஸ்டென்ஷிப் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.8 ஆயிரம் உதவித் தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன், மூன்றாம் ஆண்டிலிருந்து படிப்புக் கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை சலுகையும் அளிக்கப்படும். இந்த உதவித் தொகை பெறுவதற்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரம் கற்பிக்கும் பணியிலோ அல்லது வேறு வளர்ச்சித் திட்டங்களிலோ பங்கேற்க வேண்டியதிருக்கும். இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள் இரண்டு செமஸ்டர்கள் தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பெறலாம் அல்லது நான்காம் ஆண்டில் ஆய்வுக்கட்டுரை எழுத வேண்டியதிருக்கும். முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தக் கல்வி நிறுவனம் வழங்கும் மெரிட் ஸ்காலர்ஷிப் கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. இதுகுறித்து, இந்தக் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பிட்ஸ் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனைப் பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணமான ரூ.1,600 செலுத்தியதற்கான ஆதாரத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். இந்தக் கட்டணத்தை எப்படிச் செலுத்த வேண்டும் என்ற விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Admission Officer, BITs, Pilani - 333 031, என்ற முகவரிக்கு மே 30ம் தேதி மாலை 5மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதிய பிறகு, ஜூன் 10ம் தேதி அட்மிஷன் பட்டியல் வெளியிடப்படும் என்று பிட்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொறியியல் படிப்பைப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும். ஆனால், பிளஸ் டூ படிப்பைப் படித்து முடித்த பிறகு பிஎஸ்சி படிப்பில் சேர்ந்திருப்பார்கள். அதுபோல, என்ஜினீயரிங் படிப்பில் அதாவது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் ஆர்வம் உள்ள, அறிவியல் பட்டதாரி மாணவர்கள் இந்த நான்கு ஆண்டு எம்இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: www.bitsadmission.com
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive