Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்விக் கடன் - தேவைப்படும் ஆவணங்கள்.

       மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான ஆவணங்களை கோருகின்றன. ஆனால் பொதுவாக எல்லா வங்கிகளும் கோரும் ஆவணங்களின் விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
 
*அரசு அதிகாரியின் சான்று பெற்ற (அட்டஸ்டட்)

*மாணவரது பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியிருப்புச் சான்றிதழ்
விண்ணப்பிக்கும் மாணவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,
மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் அவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுபவரது புகைப்படம்

*மதிப்பெண் சான்றிதழ் அல்லது முந்தைய கல்வித் தகுதிக்கான சான்றிதழின் நகல்கள்

*மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தற்போதைய வருமானச் சான்றிதழ்
கல்விக் கடனுக்கு ஈடாக ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பின் அதன் அரசு மதிப்புச் சான்றிதழ்(ஏதேனும் இருந்தால்)

*கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்கும் மாணவரது அல்லது அவரது பெற்றோரது அல்லதுஜாமீன் கையெழுத்து போடும் நபரது கடந்த 6 மாதத்திற்கான வங்கிக் கணக்கு அறிக்கை

*வெளிநாட்டு படிப்பிற்கு விண்ணப்பித்திருப்பின், பாஸ்போர்ட் அல்லது விசா, விமானக் கட்டணத்திற்கான ரசீது போன்றவற்றை மாணவர் சமர்ப்பிக்க வேண்டும்.

*இவை அல்லாமல், வங்கிகள் தங்களுக்கு என்று சில ஆவணங்களை குறிப்பாக கேட்க வாய்ப்பிருக்கிறது.

*அவற்றையும் மாணவர்கள் அளிக்க வேண்டியது அவசியம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive