Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் நியமனத்தில் கமிஷன்? பணத்தை திருப்பித்தரும் இடைத்தரகர்கள்- இந்து தமிழ்

         ஆசிரியர் தகுதித் தேர்வில் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறியிருந்த இடைத்தரகர்கள், அந்த பணத்தை அந்தந்த ஆசிரியர்களிடமே திரும்ப ஒப்படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டுமென பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
           வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் குறைந்த மதிப்பெண் பெற்ற பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு வெளியானது. மேலும் பணி நியமன உத்தரவு பெற்றுத்தருவதாகக் கூறி பலர் இடைத்தரகர்களாக செயல்பட்டு வருகின்றனர் என்று ஆசிரியர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதில் சேலத்தைச் சேர்ந்த ஒருவரும், கோவையில் உள்ள ஒருவரும் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர் என கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னையில் காவல் துறை, மாவட்ட ஆட்சியரகம், லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் கடந்த 15-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இது குறித்த அன்றைய தினமே `தி இந்து’வில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து இணையதளங்கள் மற்றும் மற்ற நாளிதழ்களில் இந்த செய்தி வெளியானது.
       இந்நிலையில் கடந்த 17-ம் தேதி முதல் ஆசிரியர்களிடம் இருந்து பெற்ற பணத்தை இடைத்தரகர்கள் திருப்பி ஒப்படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பணத்தைக் கொடுத்து விட்டு தங்களது தகவல்களை வெளியே கூறக்கூடாது. எங்களுக்கும், உங்களுக்கும் சம்பந்தமில்லை என இடைத்தரகர்கள் எழுதி வாங்கிச் செல்கின்றனர் என்றனர்.
இது குறித்து ஈரோட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
      தகுதித் தேர்வில் நான் பெற்ற மதிப்பெண் 91. எனது மதிப்பெண் மிகக் குறைவாகவே இருந்தது. மார்ச் முதல் வாரம் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் பெற்றனர். ஆனால், செப்.17-ம் தேதி எனது முழு பணத்தையும் திருப்பித் தந்துவிட்டனர். இவ்வளவு நாள் வேலை கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்தேன். பணத்தைக் கொடுக்கும் போது, எங்களுக்கும், உங்களுக்கும் எந்த சம்பந்தமில்லை என எழுதிக் கொடுக்க வற்புறுத்தினர். பணத்தை கலையரசன் என்பவரிடம் கொடுத்தோம். ஆனால் திருப்பிக் கொடுக்க வந்தவர்கள் வேறு நபர்கள் என்றார்.
       கலை ஆசிரியர் நலச் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறுகையில், தமிழகத்தில் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு நாள்களாக இடைத்தரகர்கள் கொடுத்தனுப்பியதாகமுழுத்தொகையையும் சிலர் கொண்டு வந்து கொடுத்துச் செல்கின்றனர் எனப் பணம் கொடுத்த ஆசிரியர்களே கூறுகின்றனர். நாமக்கல் மாவட்டம் வாழப்பாடியில் ரூ.65 லட்சம் வரை இடைத்தரகர்கள் திருப்பிக் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.




15 Comments:

  1. vanganathu thapuna asiriyar paniku asai pattu pani mela akarai elama money mela asai vechu lanjam kuduthangale teachers avanga than muthal kuttravali muthala avangaluku eni epavume vela kedaika kudathu.they are unfit for teacher job.is the teaching profession is money making job?definitely not.it is life making job.just keep it in your mind

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்து ..... வரவேற்கிறேன் ....

      Delete
    2. அருமையாக சொன்னீர்

      Delete
  2. இந்த GO 71 ஐ ஆதரிக்கும் கனவான்களே.....
    இந்த ஜி ஓ தொடர்ந்தால் நாளை வரும் விபரீதம் அறிவீர்களா ???? 
    1) மூத்த தேர்வர்களை அழிக்கும்
     2) நம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் ,கல்லூரிகளில் (அதிக மதிப்பெண் பெற) சேர்க்க தூண்டும்
    3) தற்போது உங்களுக்கு வேலை கிடைக்காமல் போனால் என்றும் உங்களுக்கும். வேலையில்லை ..
    என்னது இது புரளியென்று என அலட்சியம் காட்டாதீர் ...
    தற்போது பயின்று வருபவர்களுக்கு அதிகமாக மதிப்பெண்களை வாரி வழங்குகின்றன பல தனியார் கல்வி நிறுவனங்கள் ..... 
    இன்று நீங்கள் மட்டுமே சந்தோஷமாக வாழ எண்ணி உங்கள் தலைமுறைகளை கண்ணீருக்கு ஆளாக்காதீர்கள் ..நன்றி ....

    ReplyDelete
    Replies
    1. Ram sir 100% unmai aanal namasonnal suyanalavathinu solluvanga;

      Delete
    2. உண்மை தான் நண்பரே ....
      தற்காலிக செலக்‌ஷன் லிஸ்ட் ல் தனது பெயரை காணும் முன் அனேகர் GO 71 ஐ கடுமையாக எதிர்த்தனர் ... ஆனால் இன்று அவர்கள் பெயரை கண்டதும் நம்மை "சுயநலமி" என்று இகழ்ந்துரைக்கின்றனர் ......
      ஆனால் உண்மையான சுயநலமிகள் யார் என்று அவர்களும் அறிவர் .......

      Delete
    3. மேலும் இந்த. வெயிட்டேஜ் முறை தொடர்ந்தால் அதிக. மதிப்பெண் பெறுவதற்கு என்ன. வேண்டுமானாலும் செய்வார்கள் .அதிகமான. பணத்தைக் கொடுத்து ,அதிகமான. மதிப்பெண் பெற. முயற்சி செய்வார்கள் .குறுக்குவழியை நாடுபவர்கள் எதைவேண்டுமானாலும் செய்வார்கள், இது உண்மை

      Delete
  3. enna nadakkuthu ???????

    Ellam ellection llathan ethirollikkum.

    Ethukku TET.

    simply abolish the TRB Board. Hand over to Other department.

    EEN eppadi teachers pada paduthuringa. nalla erugappa engala viduga.

    ReplyDelete
  4. ENNATHAN NADUKKUM NADAKKATTUME, IRUTTINIL NEETHI MARAIYATUME, THANNALE VELI VARUM KALANGATHE, ORU THALAIVAN IRUKKIRAN MAYANGATHE.

    ReplyDelete
  5. Kolai seithavarai Vida thoondiyavargal kuttravali

    ReplyDelete
  6. Good news for selected candidates

    ReplyDelete
  7. வெயிட்டேஜ்முறை தொடர்ந்தால் கல்லூரிகளில் பணம்தான் விளையாடும் ,

    ReplyDelete
  8. entha news moolam tetla thagothiyanavargal mattume edam pidithullanar enbathu theriyum

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive