Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை,ஆசிரியர் பணி நியமனத்திற்கு கவுன்சிலிங் நடத்தி கொள்ளலாம்.

          நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த பி.எட். பட்டதாரியான பவுசிநேசல் பேகம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–

         பி.லிட்., பி.எட். பட்ட தாரியான நான் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்விலும் தேவையான மதிப் பெண்களை பெற்றுள்ளேன். தற்போது பட்டதாரி ஆசிரியர் பணி இடத்திற்கு தேர்வு நடைபெற்று வருகிறது.

       இந்த தேர்வில் ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் மட்டுமல்லாமல் பிளஸ்–2, டிகிரி, பி.எட்., படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறது.

        2000–மாவது ஆண்டுக்கு முன்பு பிளஸ்–2 தேர்வில் 1200–க்கு 1000–த்துக்குள் தான் மதிப்பெண் எடுக்க முடிந்தது. ஆனால் இப்போது 1200–க்கு 1195 மதிப்பெண்கள் வரை எடுக்கக்கூடிய நிலை உள்ளது.

     2000–மாவது ஆண்டுக்கு முன்புள்ள பாடத் திட்டங்கள் கடினமாக இருந்தன. கல்வித்தரமும் போதிய அளவு இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் வழங்கினால் எங்களை போன்றோர் பாதிக்கப்படுவார்கள். எனவே வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

             புதுக்கோட்டை தமிழரசன் உள்பட 15 பேர் இதே பிரச்சினைக்காக மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் சேவியர் ரஜினி, கணபதி சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

          வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், ஆசிரியர் பணி நியமனத்திற்கு கவுன்சிலிங் நடத்தி கொள்ளலாம். ஆனால் பணி நியமன உத்தரவுகள் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.




8 Comments:

  1. posting can be given according to their marks they got in tet if many got the same marks their age seniority can be seen

    ReplyDelete
    Replies
    1. மாண்புமிகு முதல்வர் அம்மா,
      TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல என்பதை இங்கு தெளிவாக தெரிவிக்க வேண்டியது உள்ளது.
      BA, BEd,DTEd, இது எல்லாம் எப்படி ஆசிரியர் பதவிக்கு அடிப்படை தகுதியோ, அதே போல் இந்த TET தேர்வில் தேர்ச்சி பெறுவதும் ஒரு தகுதி அவ்வளவே.
      ஆனால் TET மதிப்பெண்ணோ, Degree மதிப்பெண்ணோ, BEd மதிப்பெண்ணோ, இவை அனைத்தின் மதிப்பெண்ணோ கொண்டு தேர்வு செய்வது தேவையற்றது மற்றும்அல்லாமல் சமூக நீதிக்கு எதிரானதும் கூட.
      +2 முதல் ஒவ்வொரு படிப்பிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே TET தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார் எனவே, இந்த TET தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற அனைவருமே ஆசிரியர் பதவி பெற தகுதி,திறமை கொண்டவர்கள் ஆவர்.
      selecetion என்பது, இத்தனை பிரச்சினைக்குரிய விசயம் அல்ல. மிக சிறந்த தீர்வு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள,
      TET பாஸ் செய்த நபர்களை அவர்களின் Employment Registration Seniiority படி Selection செய்து பணி வழங்கினால் அனைவரும் சம வாய்ப்பு பெற முடியும்.
      For Example: TET என்ற தேர்வு நடைமுறை படுத்தும் முன்பு வரை DTEd, BEd முடித்த ஆசிரியர்கள் Employment Exchange இன் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றனர். இது எந்த வகையான பிரச்சினையையும் தராமல், தங்கள் முறை வரும் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போதும், employment Exchange இல் பதிவு செய்தவர்களில் TET PASS செய்து, அதை பதிவு செய்த நபர்களில் இருந்து மட்டுமே வாய்ப்பு என்பது, தரமான, பல வருடம் காத்திருந்த முதல் ஆசிரியர்க்கு பணி வழங்குவது தான் நீதி, நியாயம், தர்மம்.
      இதில் தகுதி குறைந்த ஆசிரியர் என்ற பேச்சும் இல்லை, தனக்கு நீதி இல்லை என்றும் யாரும் கூற வாய்ப்பும் இல்லை.
      சமீபத்தில் படிப்பு முடித்து,TET பாஸ் செய்த நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள், இப்போது முடித்து உடனே பணி எதிர்பார்க்கும் நம்மை போலவே தான் கடந்த 10-15-20 ஆண்டுகள் காத்திருக்கும் (Rs.2000,3000 என சொற்ப சம்பளத்தில் பல வருடம் உழைத்து,) தன் 35-40-45 வயது வரை govt ஆசிரியர் பணி என்பது வெறும் கனவாகி விடுமோ என கண் கலங்கும் மூத்த ஆசிரியர்களுக்கு துரோகம் அல்ல ஒரு தாய் போல நன்மை மட்டுமே செய்வேன் என நீங்கள் சிறப்பான இந்த முடிவை அறிவுக்கும் நாள் உண்மையான ஆசிரியர்களின் பொன் நாள்.
      மேலும் ஒவ்வொரு 6 மாதம் அல்லது வருடத்திருக்கு ஒரு முறை TET தேர்வு நடத்தும் போது, தற்போது Seniority இருந்தும், TET தகுதி இல்லாத மூத்த ஆசிரியர்கள் வாய்ப்பை பெற முடியும். தகுதி தேர்வில் ஒரு முறை பாஸ் செய்தால் போதும் (7 வருடம் என்பது போதாது) அவர் மீண்டும் TET எழுத தேவை இல்லை (Just Like BA,BEd). என்று அறிவித்தால் மீண்டும் மீண்டும் TET தேர்வு எழுத வேண்டி வருமோ என அச்சம் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் 7 வருடத்திற்குள் ஒருவர்க்கு பணி வாய்ப்பு வந்து விடும் அல்லது தந்து விட முடியும் என உறுதி கூற இயலாது.
      தற்போது உள்ள weightage system Degree, DTEd, BEd தனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அதிகம் தர, பெற பெருமளவு லஞ்சம் தர வழி செய்யும், மேலும் கல்வியின் தரம் என்பது தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கிடைக்கும் வரம் என பெற்றோர் மற்றோர் நம்பும் வகை செய்யும்.

      Delete
  2. above 90 marks in tet they must to win the job it is correct soln

    ReplyDelete
  3. கடவுளாலும் கை விடப்பட்ட பட்டதாரிகள்
    யார் செய்த குற்றமிது - நாங்கள் தமிழ் நாட்டில் பிறந்தது குற்றமா?
    வளர்ந்தது குற்றமா? நாங்கள் தமிழ்நாட்டில் படித்தது குற்றமா?
    ஆட்சி மாறுகிறது -5 ஆண்டுகளில்
    காட்சி மாறுகிறது - எங்கள்
    வளர்ச்சி ( வயது) மாறுகிறது.
    இத்தனை காலம் வேலைதராதது - யார் குற்றம் ?
    நல்லவர்களே! கேளுங்கள் , நாங்களும் தமிழர்கள்தான்.
    தட்டிப்பறிப்பது எங்கள் வேலையை மட்டுமல்ல!
    எங்கள் வாழ்வும் தான்!
    மனிதர்களை தரத்தால் பிரித்து கடவுள் கொடுத்த
    வரத்தையும் தடுத்து விட்டீர்கள்! - ஏன்
    கடவுளாளும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.
    இந்த நிலையும் மாறும்......
    காலம் பதில் சொல்லும்...
    எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....
    அம்மா...
    நாங்களும் உங்கள் பிள்ளை தான்........!

    ReplyDelete
  4. கடவுளாலும் கை விடப்பட்ட பட்டதாரிகள்
    யார் செய்த குற்றமிது - நாங்கள் தமிழ் நாட்டில் பிறந்தது குற்றமா?
    வளர்ந்தது குற்றமா? நாங்கள் தமிழ்நாட்டில் படித்தது குற்றமா?
    ஆட்சி மாறுகிறது -5 ஆண்டுகளில்
    காட்சி மாறுகிறது - எங்கள்
    வளர்ச்சி ( வயது) மாறுகிறது.
    இத்தனை காலம் வேலைதராதது - யார் குற்றம் ?
    நல்லவர்களே! கேளுங்கள் , நாங்களும் தமிழர்கள்தான்.
    தட்டிப்பறிப்பது எங்கள் வேலையை மட்டுமல்ல!
    எங்கள் வாழ்வும் தான்!
    மனிதர்களை தரத்தால் பிரித்து கடவுள் கொடுத்த
    வரத்தையும் தடுத்து விட்டீர்கள்! - ஏன்
    கடவுளாளும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.
    இந்த நிலையும் மாறும்......
    காலம் பதில் சொல்லும்...
    எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....
    அம்மா...
    நாங்களும் உங்கள் பிள்ளை தான்........!

    ReplyDelete
  5. அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீர்...
    வேலைவாய்ப்பு பதிவு தேவை இல்லை எனில் அந்த அலுவலகம் எதற்கு?
    வேலைவாய்ப்பு பதிவு அலுவலர்கள் எதற்கு?
    20 முதல் 30 வயது வரை வேலை என்றால், 30 ஆண்டுகளுக்கு
    பி. எட் படித்த மாணவர்கள் நிலை என்ன்?
    இரவு பகலாக டெட் தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி பெற்ற ( 30 வயதுக்கு
    மேற்பட்ட ) 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா?
    எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே!
    நாங்களும் தமிழன் தானே!.....
    எங்களுக்கு உதவ உணர்வில்லையா/
    உணரவில்லையா?
    தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது...
    ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில்.
    கடவுளாலும் கை விடப்பட்ட பட்டதாரிகள்
    யார் செய்த குற்றமிது - நாங்கள் தமிழ் நாட்டில் பிறந்தது குற்றமா?
    வளர்ந்தது குற்றமா? நாங்கள் தமிழ்நாட்டில் படித்தது குற்றமா?
    ஆட்சி மாறுகிறது -5 ஆண்டுகளில்
    காட்சி மாறுகிறது - எங்கள்
    வளர்ச்சி ( வயது) மாறுகிறது.
    இத்தனை காலம் வேலைதராதது - யார் குற்றம் ?
    நல்லவர்களே! கேளுங்கள் , நாங்களும் தமிழர்கள்தான்.
    தட்டிப்பறிப்பது எங்கள் வேலையை மட்டுமல்ல!
    எங்கள் வாழ்வும் தான்!
    மனிதர்களை தரத்தால் பிரித்து கடவுள் கொடுத்த
    வரத்தையும் தடுத்து விட்டீர்கள்! - ஏன்
    கடவுளாளும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.
    இந்த நிலையும் மாறும்......
    காலம் பதில் சொல்லும்...
    எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....
    அம்மா...
    நாங்களும் உங்கள் பிள்ளை தான்......

    ReplyDelete
  6. பட்டதாரி ஆசிரியர்களின் புலம்பல்

    10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றூம் 10
    ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு அரசு வேலை புறக்கனிப்பு மிகவும் வேதனை அளிக்கிறது.

    அரசு பள்ளிகளில் 100 % தேர்ச்சிபெற அழைப்பு விடுக்கும் கல்வித்துறை.
    10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றூம் 10 வகுப்பில் 100 % தேர்ச்சிபெற வைத்தும் என்ன பலன்.TET தேர்ச்சிபெற்றும் வீணானது.
    PG TRB க்கு ஒரு முறை TET க்கு வேறா ?
    மனித உரிமை, தேடும் மனிதர்கள்.எங்கே ?
    10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றூம் 10 ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு பெற்ற 80 % பட்டதாரி ஆசிரியர்கள்(விவசாயக்குடும்பம்) புலம்பல் மனித உரிமை, தேடும் மனிதர்கள் எங்கே ?.
    10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றும் 10 ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு பெற்ற 50% கிரமபுற பட்டதாரி மாணவர்கள். புலம்பல் மனித உரிமை, தேடும் அவலம்.
    அம்மா...
    நாங்களும் உங்கள் பிள்ளைகள் தானே.......!
    நாங்களும் உங்கள் தமிழன் தானே …………! இந்த நிலையும் மாறும்......
    காலம் பதில் சொல்லும்...
    எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....

    ReplyDelete
  7. In upsc exam for ias&ias weitage method not accepted.In Tnpsc exam Group I & II weitage method not followed. In tamil nadu medical service not followed weitage method for appointing doctors.Then why for tet. India is a multi polar culture nation. All law made by central govt do not follow asif by the state govt may. Change for state interest as per constitutional ammendment. So tn govt don't follow weitage method as amended by central govt.Avoid weitage or cancelled tet 2013 exam to end all confusion. If allow to continue it made bad opinion against political party.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive