Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனத்துக்குத் தடை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

      தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களைச் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், கத்தகுறிச்சியைச் சேர்ந்த வி.தமிழரசன் தாக்கல் செய்த மனு விவரம்:
பி.எஸ்ஸி., பி.எட். படித்துள்ள எனக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரையின்பேரில் சான்றிதழ் சரிபார்ப்பு 2010-ஆம் ஆண்டு மே 13-இல் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், என்னை பணிக்குத் தேர்வு செய்யவில்லை. அந்தச் சமயத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை.
இதற்கிடையே, தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. 2011-2012-இல் நடந்த தேர்வில் 88 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அதன்பிறகும் பணிக்குத் தேர்வாகவில்லை. 2013-இல் நடந்த தகுதித் தேர்வில், 150-க்கு 92 மதிப்பெண்கள் பெற்றேன். ஆசிரியர் பணி நியமனத்துக்கு இது தகுதியான மதிப்பெண் ஆகும். ஆனால், பணி நியமனத்துக்கு முந்தைய நடைமுறைப்படி பரிசீலனை செய்யப்படவில்லை.
மேலும், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு தகுதிகாண் மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டு, அதற்கான அரசாணை 2014-ஆம் ஆண்டு மே 30-இல் வெளியிடப்பட்டது. இதில் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், தகுதித் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றைக் கொண்டு தகுதிகாண் மதிப்பெண் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தப் புதிய நடைமுறை, பணி நியமனத்துக்குக் காத்திருக்கும் போட்டியாளர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக அமைந்துவிடும். ஏனெனில், நடைமுறையில் இருக்கும் தேர்வு முறை, வினாத்தாள், மதிப்பீடு ஆகியவையும், 25 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்வு முறையும் ஒரே மாதிரியானதல்ல. 25 ஆண்டுகளுக்கு முன்பு அதிக மதிப்பெண்கள் எடுப்பது என்பது சுலபமல்ல. ஆனால், இப்போது நிலை மாறியிருக்கிறது. ஆகவே, சமீபத்தில் தேர்வு எழுதியவர்களையும், பல ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு எழுதியவர்களையும் ஒரே மாதிரியாகக் கருதுவது ஏற்புடையதல்ல.
அதேபோல பதிவு மூப்பு, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்படவில்லை. இந்தத் தகுதிகாண் மதிப்பெண் முறை அறிவியல்பூர்வமாக சிந்திக்காமல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், இதன் அடிப்படையில் நடத்தப்படும் ஆசிரியர் பணி நியமனக் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதேபோல, மேலும் 17 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரண், தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்தார். இருப்பினும், கலந்தாய்வு நடத்துவதற்கு எவ்விதத் தடையும இல்லையென்று உத்தரவிட்டார். ஏற்கெனவே, தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டிருந்தால், அதற்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.




2 Comments:

  1. மாண்புமிகு முதல்வர் அம்மா,
    TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல என்பதை இங்கு தெளிவாக தெரிவிக்க வேண்டியது உள்ளது.
    BA, BEd,DTEd, இது எல்லாம் எப்படி ஆசிரியர் பதவிக்கு அடிப்படை தகுதியோ, அதே போல் இந்த TET தேர்வில் தேர்ச்சி பெறுவதும் ஒரு தகுதி அவ்வளவே.
    ஆனால் TET மதிப்பெண்ணோ, Degree மதிப்பெண்ணோ, BEd மதிப்பெண்ணோ, இவை அனைத்தின் மதிப்பெண்ணோ கொண்டு தேர்வு செய்வது தேவையற்றது மற்றும்அல்லாமல் சமூக நீதிக்கு எதிரானதும் கூட.
    +2 முதல் ஒவ்வொரு படிப்பிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே TET தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார் எனவே, இந்த TET தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற அனைவருமே ஆசிரியர் பதவி பெற தகுதி,திறமை கொண்டவர்கள் ஆவர்.
    selecetion என்பது, இத்தனை பிரச்சினைக்குரிய விசயம் அல்ல. மிக சிறந்த தீர்வு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள,
    TET பாஸ் செய்த நபர்களை அவர்களின் Employment Registration Seniiority படி Selection செய்து பணி வழங்கினால் அனைவரும் சம வாய்ப்பு பெற முடியும்.
    For Example: TET என்ற தேர்வு நடைமுறை படுத்தும் முன்பு வரை DTEd, BEd முடித்த ஆசிரியர்கள் Employment Exchange இன் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றனர். இது எந்த வகையான பிரச்சினையையும் தராமல், தங்கள் முறை வரும் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போதும், employment Exchange இல் பதிவு செய்தவர்களில் TET PASS செய்து, அதை பதிவு செய்த நபர்களில் இருந்து மட்டுமே வாய்ப்பு என்பது, தரமான, பல வருடம் காத்திருந்த முதல் ஆசிரியர்க்கு பணி வழங்குவது தான் நீதி, நியாயம், தர்மம்.
    இதில் தகுதி குறைந்த ஆசிரியர் என்ற பேச்சும் இல்லை, தனக்கு நீதி இல்லை என்றும் யாரும் கூற வாய்ப்பும் இல்லை.
    சமீபத்தில் படிப்பு முடித்து,TET பாஸ் செய்த நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள், இப்போது முடித்து உடனே பணி எதிர்பார்க்கும் நம்மை போலவே தான் கடந்த 10-15-20 ஆண்டுகள் காத்திருக்கும் (Rs.2000,3000 என சொற்ப சம்பளத்தில் பல வருடம் உழைத்து,) தன் 35-40-45 வயது வரை govt ஆசிரியர் பணி என்பது வெறும் கனவாகி விடுமோ என கண் கலங்கும் மூத்த ஆசிரியர்களுக்கு துரோகம் அல்ல ஒரு தாய் போல நன்மை மட்டுமே செய்வேன் என நீங்கள் சிறப்பான இந்த முடிவை அறிவுக்கும் நாள் உண்மையான ஆசிரியர்களின் பொன் நாள்.
    மேலும் ஒவ்வொரு 6 மாதம் அல்லது வருடத்திருக்கு ஒரு முறை TET தேர்வு நடத்தும் போது, தற்போது Seniority இருந்தும், TET தகுதி இல்லாத மூத்த ஆசிரியர்கள் வாய்ப்பை பெற முடியும். தகுதி தேர்வில் ஒரு முறை பாஸ் செய்தால் போதும் (7 வருடம் என்பது போதாது) அவர் மீண்டும் TET எழுத தேவை இல்லை (Just Like BA,BEd). என்று அறிவித்தால் மீண்டும் மீண்டும் TET தேர்வு எழுத வேண்டி வருமோ என அச்சம் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் 7 வருடத்திற்குள் ஒருவர்க்கு பணி வாய்ப்பு வந்து விடும் அல்லது தந்து விட முடியும் என உறுதி கூற இயலாது.
    தற்போது உள்ள weightage system Degree, DTEd, BEd தனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அதிகம் தர, பெற பெருமளவு லஞ்சம் தர வழி செய்யும், மேலும் கல்வியின் தரம் என்பது தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கிடைக்கும் வரம் என பெற்றோர் மற்றோர் நம்பும் வகை செய்யும்.
    அரசு பணி பெற துடிக்கும், பெற்று அந்த வசதிகளை அனுபவிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை ஏன் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறீர்கள்?
    ஒன்றை நீங்கள் உணர வேண்டிய தருணம் இப்போது, மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 300 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது. இது உங்களுக்கும், உங்கள் பணி சூழலுக்கும், எதிர் கால பணி நாடுணர்களுக்கும் மிகப் பெரிய சவால்.
    இதை சொல்வதால் தங்களை குற்றம், குறை சொல்வதாக எண்ண வேண்டாம்,குறையும் மாணவர்கள் எண்ணிக்கை, பள்ளிகளை குறைக்கும், குறையும் பள்ளிகள் ஆசிரியர் பணிஇடங்களை குறைக்கும்.
    தனியார் பள்ளிகள் monopoly ஆனால் கட்டணம் உயரும், எதிர் கேள்விகள் என எதும் கேட்க முடியாது (இப்பொழுதே இந்த நிலை தான், மேலும் மோசம் ஆகும்).
    அரசுக்கு செலவு குறையும், பல்வேறு நலதிட்ட செலவும் குறையும்.

    ReplyDelete
  2. Very good sir. Naillathu nadakum endru nambuvom;naillathe nadakum!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive