பனை
அரிமாவின் பிடரியன்ன விதை கொண்டாய்
வயல்வரப்பில் முளைத்துயர்வாய் என்றும்
உள்ளம் உருக்கும் ஒண்டமிழ்ப் பாக்கள்
பதிக்கும் ஏடுகள் தந்தாய் மொழிவளர்த்தாய்
கருநிறப்பழம் தருவாய் சுவைகிழங்கும் அருள்வாய்
வெள்ளமுது பதநீர் தெள்ளமுது வெல்லம் கொடுப்பாய்
முக்கண் காய்தரும் கற்பகத்தருவே தமிழ்மாநில மரமே
அப்பனைப் பாடும் வாயால் இப்பனையும் பாடுவேனே,
by
தி.பாலகுமார் வேலுார்-6 7845523471







கவிதை மிக மிக நன்று.
ReplyDeletenandru
ReplyDelete