Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அழகான கையெழுத்து: அதிக மதிப்பெண் சாத்தியம்

        அழகான கையெழுத்து அமைவது இயற்கையாக கிடைத்த வரம். அழகான கையெழுத்து, படிக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகிறது.

           எழுத்து என்பதும் ஒரு ஓவியம்தான். அந்த ஓவியத்தை அழகாய் தீட்ட வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டாலும், அனைவருக்குமே அழகான கையெழுத்து இயல்பாய் அமைந்துவிடுவதில்லை. ஆனால் அழகான கையெழுத்து அமையப்பெறாதவர்கள் அதற்காக சோர்ந்துவிட வேண்டியதில்லை.


பயிற்சியே அடிப்படை

உங்களின் கையெழுத்தை பயிற்சியின் மூலம் மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. எழுத்துக்களை கோடுகளின் அடிப்படையில் எழுதும்போது வேறுபடுவதில்தான் ஒவ்வொருவரின் கையெழுத்தும் மாறுபட்டு தெரிகிறது. எனவே முதலில் அதை சரிசெய்ய வேண்டும்.

எழுத்துக்கோர்வையில் ஏதாவது சில எழுத்துக்களோ அல்லது பல எழுத்துக்களோ சரியான வடிவம் இல்லாமல் இருந்து உங்களின் ஒட்டுமொத்த கையெழுத்து தோற்றத்தையே பாதிக்கலாம். சிலருக்கு ஒருசில எழுத்துக்கள் மட்டுமே பிரச்சினையாக இருக்கலாம். அத்தகைய எழுத்துக்களை அழகான வடிவத்தில் எழுத பழக வேண்டும். அழகான கையெழுத்திற்கு பெயர்பெற்றவர் அந்த எழுத்துக்களை எப்படி எழுதுகிறார் என்று பார்த்து அவரை பின்பற்ற முயற்சிக்கவும்.

கையெழுத்தை அழகாக மாற்றுவதில் இன்னொரு முக்கிய அம்சம் இடம். எழுத்துக்கு எழுத்து விடும் இடம், வார்த்தைக்கு வார்த்தை விடும் இடம் மற்றும் வரிக்கு வரி விடும் இடம் போன்றவை கையெழுத்தின் தோற்றத்தை மாற்றுகின்றன. எனவே இந்த வகையிலும் முறையான பயிற்சி நமக்கு வேண்டும். அழகான கையெழுத்துகளில் இந்த இடஅளவு எப்படி பின்பற்றப்பட்டுள்ளது என்பதைப் பார்த்து நாமும் அதைப் பின்பற்றலாம்.

அதிக மதிப்பெண் சாத்தியம்

அழகிய கையெழுத்தில் தேர்வை எழுதும்போது நாம் பெறும் மதிப்பெண்களுக்கு உத்திரவாதம் கிடைக்கும் என்று நம்பலாம். முன்பின் அறிமுகமே இல்லாத, யாரென்றே தெரியாத அதேசமயம் நமது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு தேர்வாளர், உங்களின் விடைத்தாளை திருத்தும்போது உங்களைப் பற்றி மதிப்பிடும் வாய்ப்பினை பெறுகிறார்.

நீங்கள் எழுதியுள்ள பதில்களை அவர் படிக்கும் அதேவேளையில், உங்களின் கையெழுத்தே பிரதானமாக அவருக்கு தெரியும். உங்களின் கையெழுத்துதான் விடைத்தாள் திருத்துபவருக்கு மகிழ்ச்சியையோ அல்லது எரிச்சலையோ தருகிறது. அந்த மகிழ்ச்சியையும், எரிச்சலையும் பொறுத்துதான் உங்களின் மதிப்பெண் அமைகிறது.

தன்னம்பிக்கை அதிகரிக்கும்

அதேசமயத்தில் தேர்வு நோக்கத்திற்காக மட்டுமே கையெழுத்தை மாற்ற வேண்டும் என்று எண்ண வேண்டாம். தேர்வு என்பது சிறிய நோக்கம் மட்டுமே. உங்களின் அழகிய கையெழுத்தானது பார்க்கும் அனைவரையுமே சந்தோஷப்படுத்தும். எல்லோரது பாராட்டையும் எல்லா நேரத்திலும் பெற்றுத்தரும். அந்த பாராட்டானது உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதோடு மட்டுமின்றி தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive