NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Cell Phone: What is the difference between 3G & 4G? - அலைபேசி கட்டுரை 2



G-க்கள் என்றால் என்ன? 
 
    
          தொலைபேசியில் நம் ஒலி சைகைகள் (சிக்னல்கள்) மின் சைகைகளாக மாற்றப்பட்டு ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும். மறுமுனையில் மீண்டும் மின் சைகைகள் ஒலி சைகைகளாக மாற்றப்படும். 

                          இவ்வாறு மாற்றப்பட்ட சைகைகள் ஒயரின் வழியாக அனுப்பப்பட்டும், பெறப்பட்டும் வந்தன. ஆனால் செல்போன்களில் ஒயா்களை பயன்படுத்த முடியாத காரணத்தால், நம் ஒலி சைகைகள் உலகம் முழுவதும் வியாபித்துள்ள, கண்ணுக்கு தெரியாத ரேடியோ அலைகளின் முதுகில் ஏற்றி விடப்படுகின்றன. வானுயா்ந்த செல்போன் டவா்களும், வானத்தில் மிதக்கும் செயற்கைகோள்களும் (சேட்டிலைட்டுகளும்) இந்த குறிப்பிட்ட பண்புடைய ரேடியோ அலைகளை நாடு முழுவதும் பரவச் செய்யும்.

             மறுமுனையில் இருக்கும் செல்போனானது இவ்வாறு பண்பேற்றம் செய்யப்பட்ட ரேடியோ அலைகளை இனம்கண்டு, அவற்றை ஒலிசைகளாக மாற்றி (முதுகில் இருந்து இறக்கி), நமக்கு எதிர்முனையில் இருப்பவா் பேசுவதை கேட்கச் செய்யும். இதில் நம் பேச்சு ரேடியோ அலைகளாக மாற்றப்படுவதை டிரான்ஸ்மிட்டிங் என்றும், எதிர்முனையில் இருந்து கேட்கும் நிலையை ரிசீவா் என்று அழைப்பா். செல்போன்களில் ஒரே நேரத்தில் பேசவும் கேட்கவும் முடியும். இதனால் இவற்றை டிரான்ஸ்-ரிசீவா் என்று அழைப்பா். முந்தைய தலைமுறை காவல்துறை வயா்லெஸ்கள், ஒரு நேரத்தில் டிரான்ஸ்மீட்டா்களாகவோ அல்லது ரிஸிவா்களாக மட்டுமே செயல்படும். இதனாலேயே ஒவ்வொரு உரையாடல் முடிந்த பின்னும் ஓவா் என்று சொல்லி, டிரான்ஸ்மிட்டரை ரிஸிவா் நிலைக்கு மாற்றி பதிலுக்காக காத்திருப்பா்.
    
         ஆரம்ப நாட்களில் ஒலி சைகைகளானது மின்சைகைகளாக மாற்றப்பட்டு ரேடியோ அலைகளின் மீது ஏற்றப்பட்டன. அதிக துல்லியம் மற்றும தகவல் (டேட்டா) பரிமாற்றத்திற்காக ஒலி சைகைள் டிஜிட்டல் எனப்படும் 0 மற்றும் 1 என்ற சைகைகாளக மாற்றப்பட்டு, ரேடியோ அலைகளின் மீது ஏற்றப்பட்டன. சில ஆண்டுகளுக்கு பின்னா் இந்த டிஜிட்டல் வழித்தடத்தின் அகலம் அதிகரிக்கப்பட்டது. (நம் ஊர் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்படுவதைப் போன்று). இந்த அகல வழிப்பாதைகள் மேலும் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.

        இதில் மின்சைகளாக அனுப்பட்ட நிலையானது முதல் தலைமுறை (1ஆம் ஜெனரெஷன்) ஆகும். மின்சைகைகள் டிஜிட்டல் முறையில் அனுப்பப்பட்ட மாற்றமானது இரண்டாம் தலைமுறை (2ஆம் ஜெனரேஷன்) (2ஜி) ஆகும். பாதையின் அகலம் விரிவுபடுத்தப்பட்ட நிலையானது மூன்றாம் தலைமுறை (3ஆம் ஜெனரேஷன்) (3ஜி) ஆகும். மேலும் பாதை விரிவுபடுத்தப்படவிருக்கும் நிலையானது 4ஆம் ஜெனரேஷன் (4ஜி) ஆகும்.

          இதில் முதல் தலைமுறை போன்களில் பேச்சு பரிமாற்றம் மட்டுமே செய்ய இயலும். இரண்டாம் தலைமுறை போன்களில் பேச்சு பரிமாற்றத்துடன், குறைந்த வேகமுடைய (256கே.பி.பி.எஸ் எல்லைக்குள்) தகவல் (இணைய) பரிமாற்றம் செய்ய இயலும். மூன்றாம் தலைமுறையின் இணைய வேகமானது 3.2எம்.பி.பி.எஸ், 7எம்.பி.பி.எஸ் மற்றும் 21எம்.பி.பி.எஸ் என்று வளா்ந்து வந்துள்ளன. இத்தகைய உயா்வேகத்தின் காரணமாக, அதிக வேக இண்டா்நெட் பயன்பாடு மட்டுமின்றி, நொடிப்பொழுதில் போட்டோக்களையும், வீடியோக்களையும் இரண்டு போன்களுக்கிடையே அனுப்ப இயலும். இதன் பயனாகவே வீடியோ கால் எனப்படும், முகம் பார்த்து பேசும் வசதி, 3ஜி போன்களில் இன்று சாத்தியமாகி உள்ளது. 


விரைவில் அடுத்தடுத்த கட்டுரைகளில் சந்திப்போம்...



நட்புடன் - கட்டுரை ஆசிரியர் திரு. பா. தமிழ், காஞ்சிபுரம்.

(பாடசாலையின் வாசகர்கள் இப்புதிய பகுதி தொடர்பான தங்கள் சந்தேகங்களை கீழே உள்ள கமெண்ட் பாக்சில் பதிவு செய்யலாம். அவற்றிற்கும் தொழில்நுட்ப வல்லுனர் தனது கட்டுரையில் பதில்களை பகிர்வார்)





2 Comments:

  1. Very Nice and useful....thanks tamil.

    ReplyDelete
  2. Excellent and hihgly useful. Need more infomation on more topics. Heart felt thanks for this endevour.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive