Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தரம் உயர்வு பள்ளிகளில் காலியிடம் சிறப்பு கலந்தாய்வு அவசியம்

       தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில்  நிலவும் காலிபணியிடங்களை, சிறப்பு கலந்தாய்வு மூலம் நிரப்பவேண்டும் என, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாகவும், 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலையாக தரம் உயர்த்தப்பட்டன. 

         கல்வியாண்டு துவக்கத்தில் அறிவிப்பின்றி, தாமதமாக அறிவித்ததால் தரம் உயர்ந்த பள்ளிகளுக்கு தேவையான மாணவர்களை தேடும் நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில், கல்வி துறை விதிப்படி ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிக்கு தலா 9 முதுகலைஆசிரியர், தலைமை ஆசிரியர் என, ஆயிரம் ஆசிரியர்களும், உயர்நிலைப்பள்ளிக்கு தலா 5 பட்டதாரி, தலைமை ஆசிரியர் என, 300 ஆசிரியர்கள் நிரப்பவேண்டும்.இதற்கான காலியிடங்களை நிரப்ப, காலம் தாழ்த்தினால் கல்வி பாதிப்பததோடு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. சிறப்பு கவுன்சிலிங் மூலம் தரம் உயர்வு பள்ளிக்கான பணியிடங்கள் நிரப்பவேண்டும் என, முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்திவருகிறது.முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் இளங்கோவன் கூறும்போது, முதுகலை ஆசிரியருக்கான டி.ஆர்.பி.,தேர்வு மற்றும் பதவி உயர்வு மூலம் தரம் உயர்வு பள்ளி காலியிடங்களை நிரப்ப காத்திருக்காமல், சிறப்பு கலந்தாய்வு மூலம் நிரப்பவேண்டும். ரெகுலர் கலந்தாய்வு வாய்ப்பு கிடைக்க பெறாதவர்கள் பயன் பெறுவர். தரம் உயர்வு பள்ளிகளில் தொடர்ந்து காலியிடம் நீடித்தால் தேர்ச்சி விகிதம் குறைவதோடு, மாணவர்கள் கல்வி பாதிக்கும். சிறப்பு கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி, கல்வித்துறைக்கு மனு அனுப்பியுள்ளோம், என்றார்.




6 Comments:

  1. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இனிய பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள்..:-)
    வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக..:-):-):-):-):-)

    ReplyDelete
  2. WAITING FOR SECOND LIST FOR PG PHY.. ADW , BC, MBC DEPT.& CORP SCL VACANCY ONLY WILL BE EXPECTED...BUT I D' T WHEN?????

    ReplyDelete
  3. WAITING FOR SECOND LIST FOR PG PHY.. ADW , BC, MBC DEPT.& CORP SCL VACANCY ONLY WILL BE EXPECTED...BUT I D' T WHEN?????

    ReplyDelete
  4. அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. waiting for PG commerce second list tamil medium vacancy

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive