Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மேலாண்மை படிப்புகளுக்கிடையிலான வித்தியாசம் மற்றும் அங்கீகாரம்

              நாம் மேற்கொள்ளும் முதுநிலை மேலாண்மைப் படிப்புகளில், எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., பி.ஜி.பி.எம்., மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு என்று பலவகைகள் இருக்கின்றன. அந்தப் படிப்புகளை அங்கீகரிப்பதற்கென்று, பலவிதமான ஏஜென்சிகளும், அமைப்புகளும் உள்ளன.

               இத்தகைய சூழலில், நீங்கள் மேற்கொள்ள விரும்பும் படிப்பின் அங்கீகாரம் மற்றும் அதன் பயன்விளைவுகள் குறித்து தெளிவாக அறிந்துகொள்வது அவசியமாகிறது. எனவே, அதுதொடர்பான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

PGDM படித்தவர், அதன்பிறகு பிஎச்.டி., படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியுமா?

இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பினால், PGDM படிப்பு, எம்.பி.ஏ., படிப்பிற்கு சமமானது என்று அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், அதை முடித்த ஒருவர், தாராளமாக, எந்தப் பல்கலையில் வேண்டுமானாலும் பிஎச்.டி., படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

இதர மாற்று வழிகள் என்னவெனில், FPM (Fellow Programme in Management) படிப்பாகும். இப்படிப்பு, அனைத்து ஐ.ஐ.எம்.,கள் மற்றும் எக்ஸ்.எல்.ஆர்.ஐ., கல்வி நிறுவனம் ஆகியவற்றில் வழங்கப்படுகிறது.

ஐ.ஐ.எம்.,களில் நேரடியாக சேரக்கூடிய வாய்ப்புகள் உள்ளனவா?

CAT தேர்வை தவிர்த்து, ஐ.ஐ.எம்.,களில் நேரடியாக சேரக்கூடிய வாய்ப்பு எதுவும் கிடையாது. வெளிநாட்டில் வசிப்போர் GMAT தேர்வின் மூலமாக ஐ.ஐ.எம்.,களில் இடம்பெறலாம். அதேசமயம், ஒருவரின் GMAT தேர்வு மதிப்பெண், படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் காலகட்டத்தின்போது, 2 காலண்டர் ஆண்டிற்கும் பழையதாக இருக்கக்கூடாது.

அட்மிஷன் செயல்பாட்டின்போது, ஒரு வெளிநாட்டு அல்லது என்.ஆர்.ஐ., விண்ணப்பதாரர் இந்தியாவில் தங்கியிருந்தால், அவர் CAT தேர்வை எழுத வேண்டியிருக்கும். அதேசமயம், இதுதொடர்பான விதிமுறைகளை, தனது விருப்பத்தின்படி, ஐ.ஐ.எம்.,கள் மாற்றிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத்திலுள்ள ஐ.எஸ்.பி., போன்ற கல்வி நிறுவனங்கள், ஓராண்டு காலஅளவு மட்டுமேயுள்ள படிப்பை வழங்குகின்றன. அத்தகையப் படிப்புகள் இந்தியாவில் செல்லுபடியாகுமா?

இந்தியாவில் உயர்கல்வி பெறுவதற்கு மற்றும் அரசுப் பணியைப் பெறுவதற்கு இந்தப் படிப்பு செல்லாது. இதுதொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள www.aicte-india.org/misappmanagement.htm.

PGDM முடித்த ஒருவர், UGC-NET தேர்வை எழுதலாமா? அல்லது டாக்டரேட் படிப்பை நோக்கி செல்லலாமா?

ஒருவர் தன்னுடைய முதுநிலைப் பட்டப் படிப்பில் அல்லது அதற்கு நிகரான அந்தஸ்துடைய அங்கீகரிக்கப்பட்ட படிப்பில், குறைந்தபட்சம் 55% மதிப்பெண் (SC/ST பிரிவினருக்கு 50%) எடுத்தால் மட்டுமே நெட் தேர்வை எழுத முடியும்.

இந்தியக் கல்வி நிறுவனங்கள் வழங்கிய முதுநிலை டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு அல்லது வெளிநாட்டுப் பல்கலைகள் வழங்கிய டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு ஆகியவற்றை முடித்தவர்கள்(அது முதுநிலைப் பட்டப் படிப்பிற்கு சமமானது என்று அங்கீகரிக்கப்பட்டிருந்தால் மட்டும்) நெட் தேர்வை எழுதலாம் அல்லது டாக்டோரல் படிப்பிற்கு செல்லலாம்.

www.aiuweb.org/Evaluation/evaluation.asp என்ற இந்தியப் பல்கலைக்கழக அசோசியேஷன் வலைதளத்தில், எம்.பி.ஏ., படிப்பிற்கு சமமான இரண்டு வருட முழுநேர PGDM படிப்புகள் குறித்த விபரங்களைக் காணலாம்.

எம்.பி.ஏ., மற்றும் PGDM ஆகிய படிப்புகளுக்கிடையிலான வித்தியாசம்?

எம்.பி.ஏ., படிப்பு என்பது, பல்கலையுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளால் வழங்கப்படும் முதுநிலைப் பட்டப் படிப்பாகும். அதேமசமயம், PGDM என்பது, AICTE அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கும் முதுநிலை டிப்ளமோ படிப்பாகும். இதன் காரணமாகத்தான், எந்தப் பல்கலையுடனும் இணைப்புப் பெறாத ஐ.ஐ.எம்., போன்ற கல்வி நிறுவனங்கள் PGDM படிப்புகளையே வழங்குகின்றன. ஏனெனில் அவற்றால் எம்.பி.ஏ., படிப்புகளை வழங்க முடியாது.

PGDM படிப்பு, AICTE அமைப்பால் அங்கீகாரம் பெற்ற ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. ஏனெனில், சுயாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள், நிகழ்கால மற்றும் எதிர்கால தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப, தங்களுக்கான பாடத்திட்டங்களை தாங்களே தயாரித்துக் கொள்கின்றன.

ஆனால், பல்கலையுடன் இணைப்புப் பெற்ற கல்லூரியாக இருந்தால், பல சமயங்களில் காலத்திற்கு ஒவ்வாத, பல்கலைகள் வைத்திருக்கும் பாடத்திட்டங்களையேப் பின்பற்ற வேண்டியிருக்கும். ஒரு கல்லூரி, எம்.பி.ஏ., படிப்பிற்கு சமமான PGDM படிப்பை வழங்குவதாக இருந்தால், அப்படிப்பு, இந்திய பல்கலைகள் அசோசியேஷனின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

படிப்பின் அங்கீகாரம் மாணவர்களுக்கு எவ்வாறு உதவுகிறது?

ஒரு கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் படிப்பு, வகுக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையிலும், தேவைப்படும் அளவில் தரமுடனும் இருக்கிறதா என்பதை உறுதிசெய்யும் செயல்பாடுதான் அங்கீகாரம் என்பது.

பொதுவாக ஒரு வணிகப் பள்ளியில், அக்கல்வி நிறுவனத்திற்கு தேவையான இடவசதி இருக்கிறதா, கட்டட வசதிகள் இருக்கின்றனவா, நூலகத்தில் போதுமான எண்ணிக்கையில் புத்தகங்கள் மற்றும் ஜர்னல்கள் இருக்கின்றனவா, ஆய்வகங்களில் தேவையான எண்ணிக்கையில் கணினிகள் மற்றும் மென்பொருள் வசதிகள் இருக்கிறதா, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் போதுமான எண்ணிக்கையில் இருக்கிறார்களா, அவர்களின் கல்வித்தகுதி சரியான முறையில் இருக்கிறதா? உள்ளிட்ட அம்சங்கள் கணக்கிடப்பட்டு தரநிலைத் தகுதி வழங்கப்படும்.

ஒரு தர நிர்ணய ஏஜென்சி வகுத்துள்ள விதிமுறைகளை ஒரு கல்வி நிறுவனம் பூர்த்தி செய்தால், அது வழங்கும் குறிப்பிட்ட படிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

புரபஷனல் பணியில் அல்லாதவர்களுக்கான பகுதிநேர எம்.பி.ஏ., படிப்பு, இந்தியாவில் செல்லத்தக்கதா?

பகுதிநேர எம்.பி.ஏ., படிப்பு என்பது பணிபுரியும் நபர்களுக்காக வழங்கப்படும் படிப்பாகும். அதேசமயம், மற்ற நபர்களுக்கு, இப்படிப்பை இரண்டாம் ஷிப்டில் (பிற்பகல் 3 மணிமுதல் மாலை வரை) நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive