Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Cell Phone Doubts

Ganesan Question: நான் Lenovo android 4.2.2- smartphone உபயோகம் செய்து வருகிறேன்.
அதில் ஒன்று., இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை  Download Firmware Upgrade என்று திரையில் தோண்றுகின்றது. இது சுமார் 50 - 500 Mb வரையில் உள்ளது.
 
Doubt 1:இதை Download செய்யலாமா.?
Doubt 2:இதை Download செய்தால் Phone Memory குறைய வாய்ப்புள்ளதா.?

Answer: கேள்விக்கு நன்றி. ஒரு நிறுவனம் ஒரு படைப்பை உருவாக்கிய பின்னா் அதை பல்வேறு சூழல்களில் சோதித்த பின்னரே சந்தைப்படுத்தும்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட படைப்பாக இருந்தாலும் உண்மையான பயனாளாரின் கையில் அந்த படைப்பானது துவக்கத்திலேயே சிறப்பாக செயல்படாது. விண்டோஸ் எக்ஸ்.பி சா்வீஸ் பேக் 2 அதிகம் பயன்படுத்தப்பட்டதைக் கூட இதற்கு உதாரணமாக சொல்லலாம். ஆரம்ப சோதனைகளில் உருவாகாத தேவைகளும், பிரச்சனைகளும் நிஜ வாழ்க்கை பயன்பாட்டில் தோன்றும். இவ்வாறு படைப்பு சந்தைப்படுத்தப்பட்ட பின்னா் தோன்றும் குறைபாடுகளை போக்க, மேம்படுத்தப்பட்ட மென்பொருள் தொகுப்பை குறிப்பிட்ட நிறுவனம் உருவாக்கும். இவ்வாறு வழங்கப்படும் மேம்பாட்டு மென்பொருளே ஃபார்ம்வோ் ஆகும்.

           இத்தகைய மென்பொருட்களை உங்கள் டிவைஸ்களில் நிறுவுவதால் கண்டிப்பாக மெமரியின் ஒரு (சிறு) பகுதி குறையும். இருப்பினும் உங்கள் டிவைஸானது போதிய நிலைப்புத்தன்மை இன்றி அடிக்கடி ரீஸ்டார்ட் ஆனாலோ, குறைந்த பேட்டரி பயன்பாட்டுடன் செயல்பட்டாலோ, டிவைஸின் சில கூடுதல் மென்பொருட்களோ அல்லது கேமிரா, ஜீபிஎஸ் மற்றும் மைக் போன்ற ஹார்ட்வோ் பாகங்களோ சரியாக இயங்கவில்லை என்றால் நாம் கட்டாயம் இந்த ஃபார்ம்வோ்களை நிறுவியாக வேண்டும்.
           மாறாக உங்கள் டிவைஸில் மேற்கண்டதைப் போன்ற குறைகளின்றி உங்கள் தேவைக்கேற்ப செயல்பட்டால், இதை நிறுவ அதிக அவசியமில்லை. மெமரி பற்றாக்குறை இல்லாதபட்சத்தில் இவற்றை நிறுவுவது உகந்தது. பெரும்பாலான ஃபர்ம்வோ்கள் உங்கள் டிவைஸின் செயல்பாட்டு வேகத்தினை அதிகரிக்கும் வகையிலேயே இருக்கும்.
             குழப்பம் இருப்பின் அந்த குறிப்பிட்ட ஃபர்ம்வேரானது எத்தகைய தேவைக்காக உருவாக்கப்பட்டது என்பதை அந்த நிறுவனத்தின் வலைப்பகத்தில் கண்டறியலாம். இவ்வாறு மேம்பாட்டின் தேவை உங்களுக்கு பயன்படாது எனில் அதை தவிர்க்கலாம். சில நிறுவனங்களின் இத்தகைய கூடுதல் மென்பொருளானது டிவைஸின் முந்தைய வேகத்தினை குறைக்கவும் செய்யலாம் எச்சரி்க்கை.
                 மேம்பாட்டின் தேவையிருந்தும் டிவைஸில் இடவசதி இல்லையெனில் அந்த நிறுவனத்தை தொடா்பு கொள்ளலாம். இதனால் பழைய மென்பொருளின் மீது கூடுதல் சுமையாக இல்லாமல், எடைகுறைந்த தனித்த மென்பொருள் உருவாக்கபட்டிருப்பின், முந்தை மென்பொருள் அழிப்பட்டு இவை நிறுவப்படும். பழங்கால வீட்டின் மேல் மற்றொரு தளம் கட்டி சுமையை ஏற்றாமல், பழைய வீட்டினை இடித்துவிட்டு புதிய வீட்டினை நம் தேவைக்கு கட்டுவதை இதற்கு உதாரணமாக கூறலாம். நன்றி.

By,
Padasalai Author Mr. Pa. Thamizh.

Ganesan: Wow ... தாங்கள் கூறிய தகவலும், விளக்கத்திற்கான உதாரணமும் மிகத் தெளிவாக புரிந்தது சார் ..

Thanks for your reply.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive