Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாணவர்களே இல்லாத 124 பள்ளிகள்

           ஜம்மு-காஷ்மீரில் உள்ள 124 பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது. இத்தகவலை அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நயீம் அக்தர் தெரிவித்தார்.

         அம்மாநிலத்தின் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் நயீம் அக்தர், 'ஜம்மு மாகாணத்தில் உள்ள 50 பள்ளிகளிலும், காஷ்மீரில் உள்ள 74 பள்ளிகளிலும் ஒரு மாணவர்கள் கூட இல்லை என்ற தகவலை தெரிவித்தார். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், நகரங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனுடன் ஒப்பிடும் போது கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் தரம் குறைவாக இருப்பதாக கூறினார். இதற்கு பதில் அளித்த மந்திரி, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
   அவர் பதிலளிக்கையில் மேலும் கூறியதாவது;

மாநிலத்தில் 27 தொடக்கப்பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 468  நடுநிலைப்பள்ளிகளும், 332 உயர்நிலை பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 95 அரசு கல்லூரிகள் மாநிலத்தில் செயல்படுகின்றன. அவற்றில் 25 கல்லூரிகள் கடந்த 5 ஆண்டுகளில் அனுமதியளிக்கப்பட்டன. இக்கல்லூரிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வு கூடங்கள் மற்றும் நூலக வசதிகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive