Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'மாஜி' கணினி ஆசிரியர்கள் போர்க்கொடி : டி.ஆர்.பி.,க்கு கடும் எதிர்ப்பு

          'அரசுப் பள்ளிகளில், 652 கணினி ஆசிரியர் நியமன பணிகளை உடனே நிறுத்த வேண்டும்' என, பணி நீக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மற்றும் பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக, போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

       தமிழக அரசுப் பள்ளிகளில், 1999 - 2000ல், கணினி பிரிவில் பட்டம் பெற்ற, 1,880 கணினி ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். பின், இப்பணியில் சேர, கணினி பட்டத்துடன் பி.எட்., முடித்திருக்க வேண்டும் என, டி.ஆர்.பி., அறிவித்தது. இதன்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 'ஏற்கனவே, 14 ஆண்டுகளாகப் பணியாற்றிய ஆசிரியர், 50 சதவீத மதிப்பெண் பெற்றால் நிரந்தரம் செய்யப்படுவர்' என, அறிவிக்கப்பட்டது. 
 
        ஆனால் இத்தேர்வில், 20 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டதாக, தொகுப்பூதிய ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கினர். பின், தேர்ச்சி மதிப்பெண், 35 ஆகக் குறைக்கப்பட்டது.ஆனாலும், ஏற்கனவே பணியாற்றிய, 652 பேரும் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், 652 பணியிடங்களுக்கு புதியவர்களை நியமிப்பதற்கான, சான்றிதழ் சரிபார்ப்புப் பணி, கடந்த, 27ம் தேதி துவங்கி நேற்று முடிந்தது. 
எனவே, பணி நீக்கப்பட்ட ஆசிரியர்கள் டி.ஆர்.பி.,க்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முறையிடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் வசந்தராஜ் கூறியதாவது:பள்ளிகளில், கணினிப் பிரிவு துவங்கியது முதல், 14 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்தோம். அப்போது, பி.எட்., முடித்தவர்கள் இப்பணிக்கு வரவும் இல்லை; கணினி பற்றி படிக்கவும் இல்லை. ஆனால், அனைவரும் கணினி படித்து விட்ட நிலையில், இத்தனை காலம், குறைந்த ஊதியத்தில் உழைத்த எங்களை பணி நீக்கம் செய்வது அநீதி. எங்களுக்காகவே உருவாக்கப்பட்ட, 652 பணியிடங்களை பதிவு மூப்பில் நிரப்புவது பாரபட்சமான நடவடிக்கை. இவ்வாறு, அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive