PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

பள்ளிக்கல்வித் துறையின் 25 ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி இன்று தொடக்கம்: அனைத்துப் பாடங்களும் டிஜிட்டல்மயமாகிறது.

       தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பாடத்திட்டங்கள் அனைத்தையும் மின்னியம் (டிஜிட்டல்) ஆக்குவதற் கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 
 
         இந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 25 ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி வகுப்புகள் இன்று திருச்சியில் தொடங்குகின்றன. அனைத்து மாநில பள்ளிக்கல்வித் துறைகளின்
பாடத்திட்டங்களை மின்னியமாக்கும் திட்டத்தை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்காக ‘இ-பாடசாலா’ என்ற மொபைல் செயலியையும் (App) அறிமுகம் செய்தது. மாநில பாடத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்காக கடந்த மார்ச் மாதம் டெல்லியில் ஆசிரியர்களுக்கு என்சிஇஆர்டி மூலம் உரிய பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இந்தப் பயிற்சியில் தமிழகத்தில் இருந்து சேலம் விஜயானந்த், திருவாரூர் சுரேஷ், விழுப் புரம் விஜயகுமார், திருவள்ளூர் சிங்கராஜ், ஈரோடு உமாமகேஷ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர். பயிற்சி முடிந்து பணிக்குத் திரும்பிய இவர்கள், முதல் கட்டமாக பத்தாம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்திட்டங்களை மின்னியமாக்கி முடித்திருக்கிறார்கள். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையின் (ஐ.சி.டி.) கீழ் இவர்கள் இந்தப் பணியை செய்து முடித்திருக்கிறார்கள். இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய ஐ.சி.டி.-யின் மாநில ஒருங் கிணைப்பாளர் ஆசிரியர் எஸ்.உமா மகேஷ்வரி, ’’பாடத் திட்டங்களை காகிதமயத்தில் இருந்து மின்னிய மாக்குவதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன்படி பாடங்களை அலைபேசியிலேயே ஃபிலிப் முறையில் படிப்பதற்கான வசதியை கொண்டு வந்திருக் கிறோம். பாடத்தை க்ளிக் செய்தால் அதை கணினியே நமக்கு வாசித் துக் காட்டும் வசதியும் இருக்கிறது. புத்தகங்களில் உள்ள பாடங்களை திருத்தம் செய்யவோ, கூடுதல் தக வல்களை சேர்க்கவோ முடியாது. ஆனால், மின்னியத்தில் தேவை யான மாற்றங்களை செய்துகொள்ள முடியும். அதுமாத்திரமல்ல, ஒரு பாடத்தை ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் எளிய முறையில் நடத்துகிறார் என் றால் அது சம்பந்தப்பட்ட வீடியோ இணைப்புகளையும் மின்னியத்தில் கொடுக்க முடியும். முதல் கட்டமாக 3 பாடங்களை கிட்டத்தட்ட மின்னி யமாக்கி முடித்திருக்கிறோம். தமி ழில் எழுத்துரு (ஃபான்ட்) மாற்றம் செய்வது கடினமாக இருப் பதால் அதிக நேரம் பிடிக்கிறது. எனவே, கூடுதல் ஆசிரியர்களைக் கொண்டு ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத் துக்குள் மின்னியமாக்கி முடிப்ப தற்காக 25 ஆசிரியர்களை அவர் களது விருப்பத்தின் பேரில் தேர்வு செய்திருக்கிறோம். அவர்களுக் கான பயிற்சிகள் திருச்சியில் புதன் கிழமை தொடங்குகிறது’’ என்றார். ஐ.சி.டி. பொறுப்பாளர் பேராசிரி யர் ஆசிர் ஜூலியஸ் கூறும் போது, ’’இந்தியாவிலேயே தமிழகத் தில்தான் கணினிகளையும் அலை பேசிகளையும் பயன்படுத்தும் குழந் தைகள் அதிகம் இருக்கிறார்கள். எனவே, இனி வரும் காலத்தில் நமது பள்ளிக் குழந்தைகள் புத்தக மூட்டைகளை தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் இருக்காது. அனைத்து பாடங்களையும் ஒரு மெமரி கார்டுக்குள் அடைத்துக் கொடுத்துவிட முடியும். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அலைபேசி வழியாக நமது பாடத்திட்டங்களை பார்க்க முடியும். எங்களிடம் உள்ள அடிப்படை வசதிகளையும் இலவச மென்பொருட் களையும் கொண்டு நாங்கள் இந்தப் பணிகளில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.
5 Comments:

 1. COMPUTER TEACHER VERY USED CLASS PLEASE APPOINTMENT IN HIGH SCHOOL AND HIGHER SECONDARY SCHOOL LEVEL

  ReplyDelete
 2. what happend 1 to 10 class computer science subject ?

  ReplyDelete
 3. what happend 1 to 10 class computer science subject ?

  ReplyDelete
 4. what happened 1 to 10 class computer science subject ?

  ReplyDelete
 5. what happened 1 to 10 class computer science subject ?

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group