NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆண்டு முழுவதும் உற்சாகம்! பள்ளிக்காலங்கள்

         கோடை விடுமுறை முடிந்து, இதோ இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. புதிய கல்வியாண்டு துவங்க உள்ளது.
 
              புத்தம்புது உத்வேகத்துடனும், நம்பிக்கையுடனும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தயாராக உள்ளனர். பள்ளி வாழ்க்கையில் மாணவர்கள் சந்திக்க வேண்டியவை, பெற்றோர் எப்படிமாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும், ஆசிரியர்களின் பங்கு என்ன என்பது குறித்து இந்த பகுதியில் நிபுணர்களின் அறிவுரைகள் இடம்பெறுகின்றன.

விடுமுறை நாட்களை முடித்துவிட்டு, புதிய கல்வி ஆண்டில் காலெடுத்து வைக்கும் பள்ளி மாணவர்களின் மனங்களில் வெளிப்படும் அதே உற்சாகம், புதிய நம்பிக்கை அந்த வகுப்பு முடியும் ஆண்டின் கடைசி நாள் வரை தொடர்வது எப்படி என விளக்குகிறார், தன்னம்பிக்கை பயிற்சியாளர் அமுதா.அவர் தெரிவித்தது...பள்ளி திறக்கும் முதல் நாள், மாணவர்களின் முகங்களை பார்க்கும் போது பனியில் பூத்த புது ரோஜாவைப் போல் பிரகாசமாக இருக்கும்.கண்கள் இரண்டும் புள்ளி மானைப் போல துறுதுறுவென்று இருக்கும். இதற்கு காரணம் சந்தோஷம். மாணவர்கள் அந்த முதல் நாளை விரும்பி, பல எதிர்பார்ப்புகளோடு பள்ளிக்கு செல்கின்றனர்.புது உடை, புது புத்தகம், புது பை, புது ஆசிரியர்கள் என்று அனைத்துமே புதியது. நண்பர்களை இடைவெளிக்கு பிறகு மீண்டும் சந்திப்பதில் ஒரு மகிழ்ச்சி. ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்கு முன்னேறியது என்றுஅனைத்துமே சந்தோஷம்.ஏன் இந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் வருடம் முழுவதும் நீடிக்க கூடாது? அதற்குமாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?நாம் படிக்கும் பள்ளியை, முதலில் மிகவும் நேசிக்க வேண்டும். கல்வி புகட்டும் ஆசிரியர்களை மரியாதைக்கு உரிய தோழர்களாக நினைக்க வேண்டும். வகுப்புத் தோழர்களை நல்ல நண்பர்களாக்கி கொள்ள வேண்டும். அப்போது தான் பள்ளியில் நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகள் அமைதியாகவும், அழகாகவும் தெரியும்.பள்ளிக்கு எதற்கு செல்கிறோம்? நல்ல கல்வியை பெறுவதற்கும், நல்லொழுக்கங்களை கற்பதற்கும் தான். கல்வி என்பது ஒருவன் தன் மனதை முழு கவனத்துடன்எந்தவொரு பொருளின் மீதும் தேவைப்படும் போது செலுத்துவது. தேவையில்லாத போது அகற்றுவதேயாகும். வெறும் தகவல்களை சேகரிப்பது மட்டுமே கல்வி ஆகாது.

அதாவது மனதை ஒருமுகப்படுத்த தெரிந்த ஒரு மாணவனுக்கு வீட்டு சூழ்நிலை, பள்ளி சூழ்நிலை, பெண் நண்பர்கள், ஆண் நண்பர்கள், வறுமை, தொலைக்காட்சி, அலைபேசி, வாட்ஸ்ஆப், முகநுால் என்று எதுவுமே அவர்களுடைய கல்வியின் கவனத்தை பாதிக்காது. முழு கவனம் ஒரு பொருளின் மீது நமக்கு எப்போது வரும்? அவற்றை நாம் அதிகமாக நேசிக்கும் போது தான் அந்த பொருளின் மீது முழு கவனமும் வரும்.அதனால் நீங்கள் படிக்கும் அனைத்து கல்வி சார்ந்த, கல்விசாராத பாடங்களையும் விரும்பி படியுங்கள். கணக்கு பிடிக்கும், அறிவியல் பிடிக்காது என்று எதையும் ஒதுக்காதீர்கள். அனைத்து பாடங்களையும்விரும்புங்கள்.எனக்கும் பிடிக்கிறது. எனக்கு இந்த பாடம் கட்டாயம் புரியும். நான் எப்படியும் புரியாத பாடங்களை நன்றாக படித்து புரிந்து கொள்வேன் என்று முடிவெடுங்கள். அந்த பாட ஆசிரியர்களிடம் நல்ல நட்பு வைத்துக் கொண்டு, புரியாதவற்றை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

விளையாட்டுகளிலும்,கலைப்பிரிவுகளிலும் பங்கேற்று குழுக்களில், பள்ளி அணிகளில் பங்களிப்பை செலுத்திப்பாருங்கள். பள்ளியின் முதல் நாள் நீங்கள் எந்த உணர்வோடும் பள்ளிக்கு சென்றீர்களோ, அதேநிலையில் அந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கும்.பள்ளிகளுக்கு முதல்முறையாக செல்லும் சின்னக் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய ஆலோசனைகளை விட, அவர்களின் பெற்றோருக்கு தான் ஆலோசனைகள் தேவைப்படுகிறது.

எந்த காரணத்தை கொண்டும் அவர்களை அடித்து, வற்புறுத்தி, அழவைத்து, மற்றவர்களோடு ஒப்பிட்டு கட்டாயப்படுத்த வேண்டாம். அவர்களின் போக்கில் அசைந்து கொடுத்து வழிக்கு கொண்டு வரும் யுக்திகளை கையாளுங்கள். இல்லையெனில் பள்ளி செல்வது என்பது சின்ன வயதிலேயே அவர்கள் மனதில் ஒரு கசப்பு, வெறுப்பு நிலை வந்துவிடும். அந்நிலை குந்தைகளின் மனதில் ஒருபோதும் வந்துவிடக்கூடாது என்பதில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.புதிய கல்வி ஆண்டில் மாணவர்களும், பெற்றோர்களும் இந்த சின்ன சின்ன ஆலோசனைகளை பின்பற்றி பாருங்கள், ஆண்டு முழுவதும் சந்தோஷமும், உற்சாகமும் உங்களையே சுற்றி இருக்கும்.இவ்வாறு கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive