Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

EMIS பதிவு செய்வதில் சிக்கல்கள்: அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் அவதி.

            கல்வி மேலாண்மை தொகுப்பில், மாணவர்களின் விவரங்களை பதிவு செய்வதில், பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், அவசர அவசரமாக அவற்றை செய்து முடிக்க உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

           தமிழகத்தில் கடந்த, 2012-13ம் ஆண்டில், கல்வி மேலாண்மை தொகுப்பு (எமிஸ்)க்காக, மாணவ, மாணவியரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியது. இதில், மாணவர்களின் ரத்த வகை, பெற்றோர், உடன் பிறந்தவர்கள், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும். சேகரிக்கப்படும் விவரங்களை கொண்டு, மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. ஆனால், ஆன்லைனில், விவரங்களை பதிவேற்றம் செய்வதில், பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தது. சர்வர் கோளாறு காரணமாக முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக, இப்பணியை செய்து முடிக்க, கல்வித்துறை அலுவலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: ஆன்லைனில், பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் விவரங்கள், சர்வரில் அப்டேட் செய்யப்படவில்லை. ஆதார் எண் சேர்க்கும் பணியை செய்ய வேண்டும். மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வருமானம் உள்ளிட்ட விரங்களையும் சேகரித்து, பதிவேற்றம் செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் விணிரங்களை சேகரிப்பதில் சிக்கல்கள் உள்ளன. மேலும், இவற்றில் பழைய போட்டோக்களே உள்ளது. அதை மாற்ற நடவடிக்கை இல்லை. இதனால், தற்போது அவசர அவசரமாக நடக்கும் பணிகளும் முழுமையடைய போவதில்லை. மே முதல் வாரத்துக்குள் பணியை முடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால், ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.




3 Comments:

  1. no data is found and the page shows maintenance error and attribute error

    ReplyDelete
  2. YES MANY MORE STUDENT DATA,S DID NOT ENTRY IN ELEMENTRY SCHOOL LEVEL.

    ReplyDelete
  3. At the year beginning they are closing EMIS site and at the year end they are opening it. What a non sense !

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive