புதிய தமிழ் பாடப்புத்தகங்களில் இளையராஜா குறித்த பாடத்தில் பிழைகள் இருக்கின்றன. இசைத்தமிழர் இருவர் என்ற பெயரில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் குறித்த பாடம் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் இளையராஜா 1995-ம் ஆண்டில் கேரளம்-நிஷாகந்தி சங்கீத விருது வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் 2013-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட அந்த விருதை 2016-ம் ஆண்டு இளையராஜா வாங்கியுள்ளார். 1998-ல் லதா மங்கேஷ்கர் வாங்கிய விருது 1988-ம் ஆண்டு வாங்கியதாக பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளையராஜா தேசிய விருது வாங்கிய ஆண்டுகளிலும் குழப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

பாடப்புத்தகங்கள் பள்ளி மாணவர்கள் மட்டும் இன்றி போட்டி தேர்வுக்கு தயாராகுவோருக்கும் அடிப்படையாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டுள்ள பாடப்புத்தகம், மாணவர்களுக்கு பல வகையில் உதவும் முறையில் உள்ளதாக பல பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். பள்ளிகளுக்கு இன்னும் புத்தகம் விநியோகம் செய்யப்படவில்லை. ஆதலால் தவறுகளை திருத்துக் கொண்டு புத்தகங்களை விநியோகம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...