13 மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய
வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில் ;காஷ்மீர், இமாச்சல பிரதே மாநிலங்களில் இடியுடன் கூடிய மழையுடன், புயல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும். உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாபின் ஒரு சில இடங்களில் பலத்த காற்று வீசுவதுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மசோரம், மற்றும் திரிபுராவில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்புஉள்ளது. காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி மற்றும்உ.பி.,யின்மேற்கு பகுதியில் இடியுடன் கூடிய மழை மற்றும் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தானின் ஒரு சில பகுதிகளில் மழை மற்றும் புழுதிப்புயல் வீசக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...