Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உங்கள் Smart TV மூலமாகவும் நீங்கள் கண்காணிக்க படலாம்!

மில்லியன் கணக்கில் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கருவிகள், பார்வையாளர் என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்காணித்து,
அதன் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து அவர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கலாம் அல்லவா!
ஆனால் இந்த தகவல்கள் விளம்பரதாரர்தளுக்கு விலைமதிப்பில்லாதவை. எனவே இவற்றை பயன்படுத்தி வீட்டில் உள்ள இணையத்தில் இணைக்கப்பட்ட மற்ற கருவிகள் மூலம் உங்களுக்கு ஏற்ற விளம்பரங்கள் மட்டும் அனுப்பப்படலாம்.
இது போன்ற மென்பொருளை கண்டறிந்துள்ள சாம்பா டிவி என்னும் நிறுவனம், உலகம் முழுக்க 14.4 மில்லியன் ஸ்மார்ட் டிவிக்களில் அவர்களின் மென்பொருள் இன்ஸ்டாஸ் செய்யப்பட்டுள்ள கூறியுள்ளது.
72 மில்லியன்
இதில் அதிர்ச்சியளிப்பது என்னவென்றால், அந்த மென்பொருள் வீட்டிலுள்ள வைஃபை உடன் இணைக்கப்பட்ட மற்ற கருவிகளை அணுக முடியும் என்பது தான்.
இதன் மூலம் தற்போது வரை சுமார் 72 மில்லியன் கருவிகளை சாம்பா டிவி நிறுவனம் தொடர்புகொள்ள முடிகிறது. இதன் மீதான மற்றொரு விமர்சனம் என்னவென்றால், வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகும் கூட இந்த கருவிகள் என்ன செய்கின்றன என அந்நிறுவனத்தால் கண்காணிக்க முடியும்.
சான்பிரான்சிஸ்கோ
சான்பிரான்சிஸ்கோ-வை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம், முதலீட்டாளர்களிடம் இருந்து 40மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியுள்ளது. சோனி, சார்ப், பிலிப்ஸ் உட்பட சுமார் 12 டிவி உற்பத்தியாளர்களிடம் ஒப்பந்தம் வைத்துள்ள இந்நிறுவனம், சில மாடல்களில் தனது மென்பொருளையும் புகுத்தியுள்ளது.
சாம்பா
இந்த டிவிகளை வாங்குபவர்கள் முதல்முறையாக இன்ஸ்டால் செய்யும் போது, இந்நிறுவனத்தின் சாம்பா ஊடாடும் டிவி சேவையை செயலாக்கம் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர்.
ஆன்-டிமாண்ட்
இந்த மென்பொருள் மூலம் ஸ்மார்ட் டிவி பார்வையாளரின் தனிப்பட்ட விருப்பத்தை அறிந்து, அதனடிப்படையில் தனிப்பட்ட பரிந்துரைகளை வழங்கமுடியும். இது பிராந்திய சேனல்கள், ஆன்-டிமாண்ட் வழங்குபவர்கள், அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் அனைத்தும் உள்ளடக்கியது.மேலும் சாம்பா டிவி பார்வையாளர்களின் ஆன்-ஸ்கிரீன் பழக்கவழக்கத்தை பொறுத்து சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது.
90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள்
90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வசதியை பெற முடிவு செய்துவிட்ட நிலையில், இந்த வசதியை வழங்க எந்த எல்லைவரை தகவல்கள் சேகரிக்கப்படும் என பெரும்பாலானோர் புரிந்துகொள்ளவில்லை.
தொலைக்காட்சி திரையில் வரும் அனைத்தையும் நொடிக்கு நொடிக்கு கண்காணிக்கிறது இந்த மென்பொருள். இதன் மூலன் சேகரிக்கப்படும் தகவல்களை விளம்பரதாரர்களுக்கு அளித்து மக்கள் எந்தவித விளம்பரங்களை விரும்பி பார்க்கிறார்களே, அதை ஒளிபரப்புகின்றனர்.
மிகப்பெரிய குறை
இந்த மென்பொருளில் உள்ள மிகப்பெரிய குறை என்னவெனில், தொலைக்காட்டிகளை மட்டுமில்லாமல் இணையத்துடன் இணைக்கப்பட்ட வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் சாம்பா டிவி கண்காணிக்கிறது என்பது தான். இந்த தகவல்களின் மூலம் குறிப்பிட்ட அந்த விளம்பரங்கள் ஸ்மார்ட்போன், டேப்லெட்அல்லது பிற ஸ்மார்ட் ஹோம் பொருட்களுக்கும் அனுப்பப்படுகின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive