நீட்பயிற்சி அளிக்க ஆசிரியர்களும் அவசியம் தேவை?

நீட் பயிற்சி மையங்கள் அவசியம் தேவை.
அதே போல் நீட்பயிற்சி அளிக்க ஆசிரியர்களும் அவசியம் தேவை. ஆனால் சுழற்சி முறையிலோ சுழற்சி அற்ற முறையிலோ ஆசிரியர்கள் நீட்பயிற்சிக்கு நியமனம் செய்வது 4 பிள்ளைகளின் நலன் கருதி 40 பிள்ளைகளின் நலனை "காவு" கேட்பது போல் உள்ளது. சுழற்சி முறை நீட்பயிற்சியினை நீர்த்துப் போகச் செய்யும். எதுவும் முழுமையாய் போய் சேராது. சுழற்சி அற்ற முறை Uள்ளி குழந்தைகள் நலனை பாதிக்கும். நான் நன்றென கருதும் தீர்வு 412 பயிற்சி  மையங்களுக்கு 2இயற்பியல் 2 வேதியியல் 2 தாவரவியல் 2 விலங்கியல் 2 கணிதம்     என மாவட்டத்திற்கு 10 PG பணியிங்கள் வீதம் 32 மாவட்டங்களுக்கு 320 புதிய பணியிடங்களை உருவாக்கி விருப்பமும் திறமையும் உள்ள ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்கி அவர்களது வேலை நாட்களை ச ஞா தி ெச பு என வகுத்து வியாழன் வெள்ளி விடுப்பு வழங்கினால் அனைவரும் பயன் பெறலாம். சனி ஞாயிறு வகுப்பு . திங்கள் செவ்வாய் புதன் வினாத்தாள் தயாரிப்பு விடைத்தாள் மதிப்பீடு என திறம்பட செயல்படலாம் . அல்லது மாணவர்கள் சேர்க்கை நடைபெறாத 20 மாவட்ட DIET விரிவுரையாளர்களை இத்திட்டத்திற்கு Uயன்படுத்தலாம்.  இது சரிபட்டு வருமா? சங்கத் தலைமை சிந்தக்கவும். மாரியப்ப பிள்ளை நாமக்கல்

Share this