பாதிக்கு பாதி விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் சேல்!சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்கள் மீது வழக்கத்திற்கு மாறாக பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போனை பாதிக்கு பாதி விலையில் விற்பதாக அறிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் ரூ.64,900 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், இரு முறை இந்த ஸ்மார்ட்போன் மீது விலை குறைக்கப்பட்டது.

இந்நிலையி, மூன்றாவது முறையாக தற்போது ரூ.12,000 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ரூ.39,990-க்கு விற்கப்படுகிறது.

அனைத்து ஆஃப்லைன் விற்பனை மையங்கள், சாம்சங் ஷாப் ஆன்லைன் தளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விரைவில் புதிய விலை மாற்றம் கொண்டுவரப்படும் என தெரிகிறது. விலை குறைப்போடு பேடிஎம் மூலம் வாங்கிவோருக்கு ரூ.8,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் சிறப்பம்சங்கள்:

# 6.2 இன்ச் QHD+1440x2960 ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

# 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா

# எக்சைனோஸ் 8895 குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட். இது 10 நானேமீட்டர் என்ற அளவில் உலகின் மிகவும் மெல்லிய பிராசஸர்

# 4 ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3500 எம்ஏஎச் பேட்டரி திறன்
3 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive