இன்ஜி., தேர்ச்சியை அதிகரிக்க பல்கலையில் சிறப்பு வகுப்பு

இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, அண்ணா பல்கலை
சார்பில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, அரசு இன்ஜி., கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகள் மற்றும் உயர் கல்வித்துறை கல்லுாரிகளில், அண்ணா பல்கலை சார்பில், நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு பருவத் தேர்விலும், மாணவர்களின் தேர்ச்சி மற்றும் தோல்வி விகிதம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

இதன்படி, அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், கணிதம், இயற்பியல் பாடங்களில், பலர் தோல்வியுறுவதும், ஆதிதிராவிட மாணவர்கள் பலர், இன்ஜி., படிப்பில் குறைந்த மதிப்பெண் பெறுவதும் கண்டறியப்பட்டு உள்ளது.

இதையடுத்து, குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறவும், ஆதிதிராவிட மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த சிறப்பு வகுப்புகளை, அண்ணா பல்கலையின் பேராசிரியர்கள் நேரடியாக நடத்த உள்ளனர் .இதே முறைப்படி, தனியார் கல்லுாரிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது

Share this