நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி - மத்திய அரசு!

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு
இலவச பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் 2697 மையங்களில் பயிற்சியளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு மே 5ம் தேதி நடைபெற உள்ளது. ஆன்லைன் முலம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. இந்நிலையில் நாடு முழுவதும் 2697 மையங்களில் பயிற்சி தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. மாணவர்கள் பதிவு செய்வதற்காக செல்போன் செயலி மற்றும் வளைத்தளத்தை செப்டம்பர் 1ம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நெட் எனப்படும் தேசிய திறனாய்வு தேர்வு, ஜேஇஇ ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பயிற்சி தேர்வு நடத்தப்படும். இதனை தொடர்ந்து நீட் தேர்வுக்கு அடுத்தாண்டு முதல் பயிற்சி தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல இலவசப் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென 2697 மையங்களில் இலவசப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கு எந்தவித கட்டணங்களும் வசூலிக்கப்பட மாட்டாது என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் தனியார் பயிற்சி மையங்களுக்கு செல்ல முடியாதவர்கள் பயனடைவார்கள் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive