Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

காற்று மாசுறுதலைத் தடுக்க 42 நடவடிக்கைகள்!

மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம்
வெளியிட்ட பட்டியலில், இந்தியாவில் உள்ள மாசுபாடு
நிறைந்த நகரங்களில் சுத்தமாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், 102 நகரங்களில் மாசுறுதல் ஆபத்தான அளவில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 73 நகரங்கள் மட்டுமே, மாசுபாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளன. மாற்று ஏற்பாடு அறிக்கை சமர்ப்பிக்காத மாநிலங்களில் அகமதாபாத், பெங்களூரு, நாக்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய முக்கிய நகரங்களும் அடக்கம்.
தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் சுத்தமான காற்று விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஒரு சில நகரங்களை மாசில்லா நகரங்கள் என்ற இலக்கை அடையாத முடியாத நகரங்களாகக் குறிப்பிட்டுள்ளது மாசு கட்டுப்பாடு வாரியம். அந்த நகரங்களில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக 42 நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டுமென்று தெரிவித்துள்ளது. வாகன மாசு, நகராட்சி திடக் கழிவு, பொருட்களை எரிப்பதால் உண்டாகும் மாசு, தொழில்துறை மாசுபாடு, கட்டுமான இடிப்பு போன்றவற்றைக் குறைக்கும் நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
இந்த நடவடிக்கைகள் முதலில் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் செயல்படுத்தப்பட்டன. இதையடுத்து, இலக்கை அடையாத முடியாத நகரங்களாகக் குறிக்கப்பட்ட நகரங்களில் இவை செயல்படுத்தப்படும். ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தேசிய சுற்றுச்சூழல் தரநிலைகள் (NAAQS) குறைந்த அளவில் இருக்கும் நகரங்களானது, இலக்கை அடையாத முடியாத நகரங்கள் எனக் குறிக்கப்படும். இந்த நகரங்களில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 35 சதவிகித காற்று மாசுபாட்டைக் குறைக்க வேண்டும் என்பதுதான் இலக்கு என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தன் கடந்த ஏப்ரல் மாதம் கூறியிருந்தார்.
உலகளவில் மாசுற்ற நகரங்களின் பட்டியலில் டெல்லி, வாரணாசி 14ஆவது இடத்தில் உள்ளதாகக் கடந்த மே மாதம் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive