பொம்மலாட்டத்தை காப்பாற்றுங்கள்” - அரசுக்கு கோரிக்கை
பொம்மலாட்ட கலையைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
 நெல்லை டவுண் கல்லணை அரசுப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பெண்  குழந்தைகளுக்கு சமூதாயத்தில் உள்ள பிரச்னைகளை தெரிந்து கொள்ளும் வகையில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கலை அறப்பேரவை சார்பில் அதன் இயக்குனர் கலைவாணன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தி காட்டினர். பொழுதுபோக்கு பொம்மலாட்டமாக இல்லாமல் பெண் குழந்தைகளுக்கு சமூதாயத்தில் உள்ள பிரச்னைகள் குறித்தும் கல்வி இடைநிற்றலால் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்தும் விளக்கி காண்பித்தனர்.
 இது குறித்து பள்ளி மாணவிகள் கூறுகையில், இந்தப் பொம்மலாட்ட நிகழ்வு 18 வயதிற்கு முன்னர் பணிக்கு செல்வதால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை மையதாக வைத்து மிகச்சிறப்பாக பொம்மலாட்ட நிகழ்வை நடத்தினர். பெண் கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் இதன் மூலம் நாங்கள் மற்றவர்களுக்கு எடுத்துரைப்போம் என்றனர்.
 நிகழ்வை நடத்தும் கலை அறப்பேரவை இயக்குனர் கலைவாணன் பொம்மலாட்ட கலை அழிவின் விளிம்பில் உள்ளது. மாணவர்களின் கல்வித்தரத்ததையும் பொம்மலாட்ட நிகழ்வு மூலம் அதிகரிக்க முடியும்.
தமிழகத்தின் தொன்மையான கலை பொம்மலாட்டம். ஆனால் தற்போது இந்தக் கலை நடத்தும் ஆட்கள் மிகக்குறைவாகவே உள்ளனர். எனவே பக்தி கலைகளை தவிர்த்து சமூக பிரச்சினைகள் சார்ந்து நடத்தப்படும் இந்தக் கலையைக் காக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். 

Share this