கேரளாவுக்கு மட்டும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு
வருமான வரி தாக்கல் செய்ய வரும் 31ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கேரளாவை சேர்ந்த மாத சம்பளம் பெறுவோர் மற்றும் வருமான வரி செலுத்த தகுதி உடையோர் தங்களுடைய வருமான வரிக்கணக்கை செப்டம்பர்ம் மாதம் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்து கொள்ளலாம். இந்த அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

Share this