பள்ளிக்கல்வித்துறை சார்பில் கேரளத்துக்கு ரூ.2 கோடி நிவாரணப் பொருட்கள்: அமைச்சர் செங்கோட்டையன்

கேரளத்தில் பெய்த கனமழையால் 8.69 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் வீடு, வாசல் மற்றும் உடமைகளை இழந்து 2,787 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
 மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 417 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கேரளத்துக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ரூ.2 கோடிக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டிளித்தார். முன்னதாக, கேரளத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கின. மேலும், பல்வேறு அரசு அதிகாரிகள், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் வெள்ள பாதிப்புகளுக்கு பல கோடி ரூபாய் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது

Share this