தமிழக பள்ளிகளில், காலாண்டு தேர்வு
நாளை முடிகிறது. மீண்டும் அக்., 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.தமிழக அரசின் பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், 1 முதல், பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து வருகிறது. செப்., 10ல், மாநிலம் முழுவதும், அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் துவங்கின.இதில், பெரும்பாலான பாடங்களுக்கு தேர்வுகள் முடிந்துள்ளன. இன்று, மொஹரம்பண்டிகை என்பதால், அரசு விடுமுறை. நாளை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன், பிளஸ் 2 வரை, அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிகின்றன.பள்ளிகளுக்கு, 23ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும், அக்., 3ம் தேதி பள்ளிகளில், இரண்டாம் பருவ பாட வகுப்புகள் துவங்கும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Jolly exam is over
ReplyDeleteSir enga school la class irukku nu sollirukanga
ReplyDelete