NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எப்பப் பார்த்தாலும் WhatsApp.. Eye Drops விற்பனை செம ஜோர்!





செல்போன் மற்றும் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதால் இந்தியாவில் கண்ணுக்கு விடப்படும் மருந்துகளின் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் , வாஷிங் மெஷின் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதை போல் செல்போன், கம்ப்யூட்டர் , லேப்டாப் ஆகியவை இல்லாத வீடுகளே இல்லை என கூறிவிடலாம். இல்லாவிட்டால் இவை மூன்றில் ஏதாவது ஒரு பொருளாவது கண்டிப்பாக இருக்கும்.
இதுபோல் எலக்டாரானிக் காட்ஜட்களை பயன்படுத்துவதால் நமது கண்கள் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
70 சதவீதம் 
நீல நிறத்தில்... .
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் 70 சதவீதம் பேருக்கு கண்களில் நீர் குறைந்து விடுகிறது (கண்ணீர் குறைதல்). அவர்களில் பாதில் பேர் 20 முதல் 30 வயதை உடையவர். இந்த சாதனங்களில் இருந்து நீல நிறத்தில் ஏற்படும் ஒளி காரணமாக கண்கள் பாதிக்கப்படுகின்றன.
ஆபத்தை
கண்களில் பிரச்சினை
சுமார் நாம் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக இதுபோன்ற ஆபத்தை உண்டாக்கும் நீல் நிற ஒளியின் முன்பு நாம் அமர்ந்திருக்கிறோம். 20 வயது முதல் 30 வயது பிரிவில் 7 பேரில் 4 பேருக்கு கண்களில் இறுக்கம், தலைவலி, பார்வையில் தெளிவின்மை, கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் வலி ஆகியன ஏற்படுகிறது என்கின்றனர்.
எய்ம்ஸ்
அழகு சாதன பொருட்கள்
எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2017-இல் ஒரு சர்வே எடுத்தது. அதில் 5000 பேர் கண் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அவர்களில் 50 சதவீதம் பேருக்கு கண்களில் நீர் உற்பத்தியாவது குறையும் நோயால் அவதிப்படுவோராவார். இதற்கு பெரும் காரணமாக செல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களின் பயன்பாடுகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் ஏசி அறைகளில் உட்கார்தல், மாசு, முகத்துக்கு போடப்படும் அழகு சாதன பொருட்களும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
கண்ணீர் குறைபாடு
விற்பனை அதிகம்
இதனால் கடந்த 2014 ஜூலை முதல் 2018 ஜூலை வரையிலான காலகட்டத்தில் கண்ணீர் குறைபாட்டுக்கு பயன்படுத்தவும் சொட்டு மருந்துகளின் விற்பனை 4.7 லட்சம் முதல் 8.15 லட்சமாக உயர்ந்துவிட்டது. இதே போல் மற்ற மருந்துகளின் விற்பனையும் அதிகரித்துவிட்டது. நவீன செல்போன்களை பயன்படுத்துவதில் உலகிலேயே இந்தியா 2-ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 3 மாதங்களில் நாளொன்றுக்கு 42 லட்சம் போன்கள் விற்பனையாகின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive