டிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை வருகை பதிவு-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் ஈரோடு நம்பியூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


மாணவர்களின் வருகை பதிவு தொடர்பான பயோ மெட்ரிக் முறை டிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் தொடங்கப்படும். விரைவில் 1.50 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்படும்.


சென்னை, காஞ்சிபுரம் கோவை போன்ற இடங்களில் கேபிள் மூலம் 300 பள்ளிகளுக்கு இலவச இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்படும். கேபிள் மூலம் ஸ்மார்ட் வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Share this

0 Comment to "டிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை வருகை பதிவு-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...