NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வரலாற்றில் இன்று 1.11.2018


நவம்பர் 1 (November 1) கிரிகோரியன்
ஆண்டின் 305 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 306 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 60 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1009 – பர்பர் படைகள் சுலைமான் இப்னு அல்-அக்காம் தலைமையில் உமையா கலீபா இராண்டாம் முகம்மதுவை அல்கலேயா சமரில் வென்றன.
1179 – இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
1503 – இரண்டாம் யூலியசு திருத்தந்தையாகத் தேர்தெடுக்கப்பட்டார்.
1512 – மைக்கலாஞ்சலோவினால் வரையப்பட்ட சிஸ்டைன் சிற்றாலயத்தின் கூரை பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது.
1520 – தென் அமெரிக்காவில் மகெல்லன் நீரிணை மகெலனால் கண்டுபிடிக்கப்பட்டது.
1570 – டச்சுக் கரையோரப் பகுதிகளை பெரும் வெள்ளம் தாக்கியதில் 20,000 பேர் வரையில் இறந்தனர்.
1604 – சேக்சுபியரின் ஒத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
1611 – சேக்சுபியரின் த டெம்பெஸ்ட் நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
1612 – போலந்துப் படைகள் மாஸ்கோ, கித்தாய்-கோரத் நகரில் இருந்து உருசியப் படைகளினால் வெளியேற்றப்பட்டனர்.
1688 – மாண்புமிகு புரட்சி: இரண்டாம் யேம்சிடம் இருந்து பிரித்தானியாவின் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் மூன்றாம் வில்லியம் இரண்டாவது தடவையாக நெதர்லாந்தில் இருந்து புறப்பட்டான்.
1755 – போர்த்துகல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 60,000-90,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1765 – பிரித்தானிய நாடாளுமன்றம் வட அமெரிக்காவில் இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் பொருட்டு 13 குடியேற்ற நாடுகளில் முத்திரை வரியை அறிமுகப்படுத்தியது.
1800 – வெள்ளை மாளிகையில் குடியேறிய முதலாவது அமெரிக்க அரசுத்தலைவர் என்ற பெருமையை ஜான் ஆடம்ஸ் பெற்றார்.
1805 – நெப்போலியன் பொனபார்ட் ஆத்திரியாவை முற்றுகையிட்டான்.
1814 – நெப்போலியப் போர்கள்: நெப்போலியனின் பிரான்சு தோல்வியைத் தொடர்ந்து ஐரோப்பாவின் எல்லைகளை மீளவரையும் பொருட்டு வியென்னா காங்கிரஸ் கூடியது.
1876 – நியூசிலாந்தின் மாகாண சபைகள் கலைக்கப்பட்டன.
1894 – மூன்றாம் அலெக்சாந்தர் இறந்ததை அடுத்து, அவரது மகன் இரண்டாம் நிக்கலாசு உருசியாவின் கடைசிப் பேரரசராக முடிசூடினார்.
1897 – அமெரிக்கக் காங்கிரசு நூலகம் முதற்தடவையாக பொது மக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
1904 – இலங்கையின் வட மாகாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது.[1]
1911 – இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையில் இடம்பெற்ற போரில் முதற்தடவையாக விமானத்தில் இருந்து குண்டுகள் வீசப்பட்டன. இத்தாலிய விமானம் லிபியா மீது குண்டுகளை வீசியது.
1914 – முதலாம் உலகப் போர்: சிலியில் செருமனியக் கடற்படையுடன் நடந்த மோதலில் பிரித்தானியக் கடற்படையினர் முதன் முதலில் தோல்வியடைந்தனர்.
1918 – நியூயோர்க் நகரின் புரூக்ளினில் இடம்பெற்ற விரைவுப் போக்குவரத்து விபத்தில் 102 பேர் உயிரிழந்தனர்.
1918 – மேற்கு உக்ரைன் ஆத்திரியா-அங்கேரிப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது.
1922 – உதுமானியப் பேரரசின் கடைசி சுல்தான் ஆறாம் மெகமெட் பதவியிழந்தான்.
1928 – துருக்கிய மொழி சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரபு எழுத்துமுறை இலத்தீன் எழுத்துகளாக மாற்றப்பட்டன.
1937 – அசர்பைசானில் இசுத்தாலினியர்கள் இலூதரனிய சமூகத்தைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களைப் படுகொலை செய்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கக் கடற்படை சொலமன் தீவுகளில் தரையிறங்கியது.
1948 – சீனாவின் தெற்கு மஞ்சூரியாவில் சீன சரக்குக் கப்பல் கப்பல் வெடித்து மூழ்கியதில் 6,000 பேர் உயிரிழந்தனர்.
1950 – புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் அமெரிக்கத் தலைவர் ஹரி டுரூமனை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
1951 – நெவாடாவில் அணுகுண்டு வெடிப்புச் சோதனையில் 6,500 அமெரிக்கப் படைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
1952 – அமெரிக்கா ஐவி மைக் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
1954 – புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
1955 – வியட்நாம் போர் ஆரம்பமானது.
1955 – கொலராடோவில் விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
1956 – அங்கேரியப் புரட்சி, 1956: அங்கேரி நடுநிலைமையை அறிவித்து வார்சா உடன்பாட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தது. சோவியத் இராணுவம் அங்கேரியினுள் மீண்டும் உட்புகுந்தது.
1956 – இந்தியாவில் கேரளம், ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. கன்னியாகுமரி கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து மதராஸ் மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைந்தது. நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது.
1957 – அக்காலத்தில் உலகின் மிக நீளமான தொங்கு பாலமான மெக்கினாக் பாலம் மிச்சிகன் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
1963 – புவேர்ட்டோ ரிக்கோ, அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடத்தில் உலகின் மிகப்பெரும் வானொலி அதிர்வெண் தொலைநோக்கி அமைக்கப்பட்டது.
1970 – பிரான்சில் நடன மாளிகை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 144 பேர் உயிரிழந்தனர்.
1979 – பொலிவியாவில், இராணுவத் தளபதி அல்பெர்ட்டோ நாத்துசு அரசுக்கு எதிரான இராணுவப் புரட்சியை நடத்தினார்.
1973 – மைசூர் மாநிலம் கர்நாடகா எனப் பெயர் மாற்றப்பட்டது.
1981 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அன்டிகுவா பர்புடா விடுதலை பெற்றது.
1984 – இந்திராகாந்தி படுகொலையை அடுத்து, இந்தியாவில் சீக்கியருக்கு எதிரான வன்முறைகள் வெடித்தன.
1993 – ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
1999 – ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கையின் முதலாவது கட்டம் புலிகளால் தொடங்கப்பட்டது.
2000 – செர்பியாவும் மொண்டெனேகுரோவும் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
2006 – பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது.
பிறப்புகள்
1762 – ஸ்பென்சர் பேர்சிவல், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1812)
1858 – உலூத்விக் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (இ. 1920)
1871 – ஸ்டீபன் கிரேன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1900)
1916 – மோகன் குமாரமங்கலம், தமிழக அரசியல்வாதி (இ. 1973
1919 – எர்மன் போண்டி, ஆங்கிலோ-ஆத்திரியக் கணிதவியலாளர், அண்டவியலாளர் (இ. 2005)
1927 – லாயிட் ருடால்ப், அமெரிக்க நூலாசிரியர், கல்வியாளர் அரசியல் ஆய்வாளர் (இ. 2016)
1935 – எட்வர்டு செயித், பாலத்தீன-அமெரிக்க எழுத்தாளர், கல்வியாளர் (இ. 2003)
1937 – கி. இராகவசாமி, புதுச்சேரி எழுத்தாளர்
1945 – நரேந்திர தபோல்கர், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (இ. 2013)
1960 – டிம் குக், அமெரிக்கத் தொழிலதிபர்
1963 – நீத்தா அம்பானி, இந்தியத் தொழிலதிபர்
1970 – கப்டன் மயூரன், விடுதலைப் புலிப் போராளி (இ. 1993)
1973 – ஐசுவரியா ராய், இந்திய நடிகை
1974 – வி. வி. எஸ். லக்சுமண், இந்தியத் துடுப்பாளர்
1978 – மஞ்சு வாரியர், இந்திய நடிகை
1986 – பென் பாக்ட்லெ, அமெரிக்க நடிகர்
1987 – இலியானா டி குரூசு, இந்திய நடிகை
இறப்புகள்
1675 – குரு தேக் பகதூர், 9வது சீக்கிய குரு (பி. 1621)
1700 – எசுப்பானியாவின் இரண்டாம் சார்லசு (பி. 1661)
1894 – உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர் (பி. 1845)
1955 – டேல் கார்னெகி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1888)
1959 – தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1910)
1972 – எஸ்ரா பவுண்ட், அமெரிக்கக் கவிஞர், திறனாய்வாளர் (பி. 1885)
1980 – கே. ஏ. தாமோதர மேனன், கேரள அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1906)
1996 – ஜே. ஆர். ஜெயவர்தனா, இலங்கையின் 1வது அரசுத்தலைவர் (பி. 1906)
2015 – ஆ. வேலுப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1936)
சிறப்பு நாள்
புனிதர் அனைவர் பெருவிழா (கத்தோலிக்க திருச்சபை)
மாசில்லா குழந்தைகள் படுகொலை (மெக்சிக்கோ, எயிட்டி)
புரட்சி நினைவு நாள் (அல்சீரியா)
விடுதலை நாள் (அன்டிகுவா பர்புடா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1981)
கர்நாடக மாநில நாள் (கருநாடகம்)
விடுதலை நாள் (அமெரிக்க கன்னித் தீவுகள்)




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive