விழுப்புரம், வேலூர், புதுவை, காஞ்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுநிலை வலுகுறைந்துவிட்டதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்துள்ளதாக கூறினார். வடதமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்யும் என்றார். தென்தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார். மேலும் பேசிய அவர் விழுப்புரம், வேலூர், புதுவை, காஞ்சி, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், ஈரோடு, கரூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றார். காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்க கூடும் என்றார்.

மேலும் பேசிய அவர் காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிவிட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என்றார். சோழவரம் மற்றும் மாதவரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 12 செ.மீ மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டார். வானூர், ரெட்ஹில்சில் தலா 11 செ. மீ.,பொன்னேரியில் 10 செ.மீ.,நுங்கம்பாக்கம், மரக்காணம்,திண்டிவனம், மீனம்பாக்கம், பண்ரூட்டியில் தலா 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்.,1 முதல் தற்போது வரை 26 செ.மீ., பதிவாகியுள்ளது. இயல்பு அளவு 32 சதவீதம். இதனால், 17 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.சென்னையில் இதுவரை பெய்த மழை அளவு 31 சதவீதம். இயல்பான அளவு 66 சதவீதம். 45 சதவீதம் குறைவான மழை பதிவாகியுள்ளது என்றார்.

Share this

0 Comment to "விழுப்புரம், வேலூர், புதுவை, காஞ்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...