நவம்பர் 19 கிரிகோரியன் ஆண்டின் 323 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 324 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 42 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1493 – கொலம்பஸ் முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா எனப் பெயர் சூட்டினார்.
1794 – அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1816 – வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1881 – உக்ரேனில் ஒடீசா நகரில் விண்கல் ஒன்று வீழ்ந்தது.
1932 – சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் HMAS சிட்னி, மற்றும் HSK கோர்மொரன் என்ற போர்க்கப்பல்களுக்கிடையில் நிழந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதில் 645 அவுஸ்திரேலியக் கடற்படையினரும் 77 நாசி ஜெர்மனியக் கடற்படையினரும் கொல்லப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் சண்டை – சோவியத்
படையினர் ஸ்டாலின்கிராட் நகர் மீது மீள் தாக்குதலை ஆரம்பித்தனர். இது
பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.
1946 – ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன.1969 – அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ள்ஸ் கொன்ராட், அலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர்கள் என்ற பெயரினைப் பெற்றனர்.
1969 – பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் பெலே தனது 1,000வது கோலைப் பெற்றார்.
1977 – எகிப்திய அதிபர் அன்வர் சதாத் அமைதிப் பேச்சுக்களுக்காக இஸ்ரேல் சென்றடைந்தார். இஸ்ரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.
1977 – போர்த்துக்கல் போயிங் விமானம் ஒன்று மெடெய்ரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
1984 – இலங்கை இராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம், கட்டுவன் என்ற இடத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1984 – மெக்சிக்கோ நகரில் எண்ணெய்க்குதங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் கொல்லப்பட்டனர்.
1985 – பனிப்போர்: அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.
1991 – தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது.
1999 – மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது சென்ஷோ விண்கலத்தை ஏவியது.
2005 – மகிந்த ராஜபக்ச இலங்கையின் 5வது நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
பிறப்புக்கள்
1831 – ஜேம்ஸ் கார்ஃபீல்ட், ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் (இ. 1881)
1835 – ராணி லட்சுமிபாய், இந்திய இராணி (இ. 1858)
1909 – பீட்டர் டிரக்கர் ஆஸ்திரிய மேலாண்மை அறிவியலாளர் (இ. 2005)
1917 – இந்திரா காந்தி, இந்தியப் பிரதமர் (இ. 1984)
1925 – சலில் சௌதுரி, வங்காள இசையமைப்பாளர் (இ. 1995_
இறப்புகள்
1998 – டெட்சுயா ஃபுஜித்தா, யப்பானிய வானிலை அறிஞர் (பி. 1920)
2008 – எம். என். நம்பியார், நடிகர் (பி. 1919)
சிறப்பு நாள்
மாலி – விடுதலை நாள்
இந்திய தேசிய ஒருமைப்பாட்டு தினம்
உலகக் கழிவறை நாள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...