உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி 2
மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை
விதிக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு
விதித்துள்ளது.
இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஆதரவை விட எதிர்ப்பே அதிகமாக உள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதை திட்டவட்டமாக அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அம்மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்காக உச்சநீதிமன்றம் விதித்துள்ள உத்தரவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள் ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் 6 மாதம் ஜெயில் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்தும் விதிக்கப்படும். 18 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிக அளவில் பட்டாசு வெடிப்பார்கள். அவர்களுக்கு அறிவுரை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு அமல்படுத்தப்படும்.
அனுமதியை மீறி பட்டாசு வெடிப்பவர்களை முதலில் எச்சரிக்கவும் தொடர்ந்து வெடித்தால் நடவடிக்கை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...