அண்ணா பல்கலை. தேர்வுகள்: 3 மாவட்ட கல்லூரிகளுக்கு மட்டும் ஒத்திவைப்பு

கஜா புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து நாகப்பட்டினம்,
திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட கல்லூரிகளுக்கான இரண்டு நாள் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (நவ.22) முதல் வழக்கம்போல் பருவத் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கஜா புயல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த 15-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற இருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. வியாழக்கிழமை முதல் திட்டமிட்டபடி அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் பருவத் தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தது.


இரண்டு நாள் தேர்வுகள் ஒத்திவைப்பு
புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இன்னும் நிறைவடையாததைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களில் இயங்கி வரும் கல்லூரிகளுக்கு மட்டும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களில் நடைபெற இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
இம்மாவட்டங்களில் இயங்கி வரும் 8201, 8202, 8203, 8204, 8208, 8211, 8215, 8216, 8217, 8222, 8226, 8123, 8128, 8144, 8302, 9103, 9109, 9112, 9114, 9116, 9117, 9124, 9126 ஆகிய குறியீடுகளைக் கொண்ட கல்லூரிகளுக்கு மட்டும் இந்த இரண்டு நாள் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இந்தத் தேர்வுகளுக்கான மறு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த மூன்று மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (நவ.22) முதல் வழக்கம்போல் தேர்வுகள் நடைபெறும் என பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) குமார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this

0 Comment to "அண்ணா பல்கலை. தேர்வுகள்: 3 மாவட்ட கல்லூரிகளுக்கு மட்டும் ஒத்திவைப்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...