'கட்டடவியல்
தொடர்பான, 'டிப்ளமா' படிப்பில், மூன்று ஆண்டுகளுக்குள் பாட திட்டத்தை
மாற்ற வேண்டும்' என, 'இந்திய ஆர்கிடெக்ட்கவுன்சில்' கெடு விதித்து
உள்ளது.பி.ஆர்க்., கட்டடவியல் படிப்புக்கு, பிளஸ் 2வில் இயற்பியல்,
வேதியியல், கணிதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என, புதிய நிபந்தனை
விதிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டில், இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.புகார் செய்ததுஇதுகுறித்து, இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் பதிவாளர், ஓபராய் பிறப்பித்துள்ள உத்தரவு:வரும் கல்வி ஆண்டில், பி.ஆர்க்., படிக்க விரும்புவோர், இனி பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும். பொது தேர்வில் குறைந்த பட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்று, 'நாட்டா' நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.
பிளஸ் 2வுக்கு சமமான கல்வி தகுதியாக, டிப்ளமா படிப்பு அங்கீகரிக்கப்படும். இந்த நடைமுறை, உடனடியாக அமலுக்கு வருகிறது.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், டிப்ளமா படிப்பில், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய வற்றில், ஏதாவது ஒரு பாடமோ, ஒன்றுக்கு மேற்பட்ட பாடமோ இடம் பெறவில்லை என, சில மாநிலங்களின் உயர்கல்வித் துறை புகார் செய்தது. இதை, ஆர்கிடெக்ட் கவுன்சில் பரிசீலித்து, டிப்ளமா மாணவர்களுக்கு சலுகை அளித்துள்ளது.
இதுதொடர்பாக, ஆர்கிடெக்ட் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பு:தற்போது அனுமதிக்கப்படுவது போல, டிப்ளமா மாணவர்கள் வரும் ஆண்டுகளிலும், ஆர்கிடெக்ட் படிப்பில் சேரலாம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், டிப்ளமாவில், மேற்கண்ட மூன்று பாடங்களை, கல்வி நிறுவனங்கள் இணைத்து கொள்ள வேண்டும்.அதற்கேற்ற வகையில், பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும். அதன்பின், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்த, டிப்ளமா மாணவர்கள் மட்டுமே, பி.ஆர்க்., படிப்பில் சேர்க்கப்படுவர்.இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...