Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கஜா புயல் - 418 அரசுப் பள்ளிகள் சேதம்: தனியார் உதவினால் சீரமைக்கலாம் என கல்வியாளர்கள் நம்பிக்கை!

நாகப்பட்டினம் மாவட்டத்தில்
சேதமடைந்துள்ள 418 பள்ளிகளை சீரமைக்க தனியார் தங்கள் பங்களிப்பை அளிக்க முன்வர வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாகை மாவட்டத்தில் கஜா புயலுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாகை ஒன்றி யம் மஞ்சக்கொல்லையில் உள்ள அரசு உதவி பெறும் குமரன் உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதோடு, சத்துணவு மைய கட்டிடத்தின் தகர மேற்கூரை காற்றில் அடித்து செல்லப்பட்டது. இப்பள்ளியில் இருந்து 10 அடி துாரத்தில் உள்ள அரசு உதவி பெறும் குமரன் நடுநிலைப் பள்ளியில் வகுப்புகள் நடைபெறும் ஒரு கட்டிடத்தில் மரம் சாய்ந்துள்ளது. அந்த மரத்தை அகற்றும் பணி யில் தொழிலாளர்கள் நேற்று ஈடுபட் டனர்.
இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் சு.பாலசுப்பிர மணியன் கூறியபோது, "1977-ல் வீசிய புயலால் எங்கள் பள்ளி முழுமையாக பாதிக்கப்பட்டது. தற் போது பகுதி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சீரமைக்கும் பணி யில் ஈடுபட்டிருக்கிறோம். பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தகங் கள் அனைத்தும் மழைநீரில் நனைந் துவிட்டன. எனவே அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் புதிதாக புத்தகம் வழங்க நடவ டிக்கை எடுத்து வருகிறோம். திருச்சி யில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத் திடம் சீருடை கேட்டிருக்கிறோம்" என்றார்.
வெட்டவெளியில் சமையல்
பெரும்பாலான பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. ஆழியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யின் சத்துணவு கூடத்தின் மீது விழுந்த மரம் அகற்றப்படாததால், வெட்டவெளியில் சமையல் செய் யும் நிலை உள்ளது. நாகூர் மியா தெருவில் உள்ள நகராட்சி முஸ்லிம் பள்ளி, நாகை ஒன்றியம் வேர்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் விழுந்த மரங்களை அகற்றம் பணி நடைபெற்றது.
இதுதொடர்பாக ஆசிரியரும், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாவட்டச் செயலாளருமான லெட்சுமி நாராயணன் கூறிய போது, "தற்போதைய நிலையில், பள்ளியை திறந்தால் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் தருவ தில் சிக்கல் ஏற்படும். சுவர்கள் ஈரப் பதத்துடன் உள்ளன. கழிப்பறையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பல பள்ளிகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, நாகை ஒன்றியத்தின் கிராமப்புற பகுதிகள், வேதார ண்யம், கீழையூர், தலைஞாயிறு ஆகிய 4 ஒன்றியங்களில் நிலைமை சீராகும் வரை பள்ளிகளைத் திறப் பதை ஒத்தி வைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டால் இந்த விடுமுறை நாட்களில் புயல் நிவாரணப் பணியாற்ற ஆசிரியர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்" என்றார்.
புயல் பாதிப்பு தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் அமுதா கூறியதாவது:
மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக 418 பள்ளிகள் சேதமடைந்துள்ளன. பொதுப்பணித் துறையிடம் சேத மதிப்பு தொடர்பான அறிக்கை கேட்டிருக்கிறோம். அறிக்கை வந்த தும் உடனடியாக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். முதற்கட்டமாக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் கள் அவர்களால் முடிந்த ஒரு தொகையை தர முன்வந்திருக்கிறார் கள் என்றார்.
உதவும் உள்ளங்கள் தேவை
இதுகுறித்து கல்வியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர் கூறும்போது, "பள்ளி களை முழுமையாக சீரமைக்கும் வரை மாணவ, மாணவிகளின் கல்வி கேள்விக்குறிதான். எனவே, தமிழக அரசு மாவட்டத்தில் சேதமடைந் துள்ள பள்ளிகளை மீட்டெடுக்க உதவ வேண்டும். தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கிராமப்புற பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி தங்களுடைய பங்க ளிப்பை அளித்தால் கூடிய விரை வில் சேதமடைந்த பள்ளிகளை சீர மைக்க முடியும்" என்றனர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive