தங்கம் வென்ற அரசு பள்ளி தங்கங்களுக்கு குவிந்த பாராட்டுகளும் ..! பரிசுப் பொருட்களும்..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம்,
கோ. இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மண்டல போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் என நான்கு பரிசுகளை வென்றனர்  மாணவி அனிதா 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவி பிரமிளா பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவிகள் சவுந்தர்யா, கனிமொழி ஆகியோர் பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் தங்கம் வென்றார்கள். இவர்கள் அடுத்த மாதம் கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் மாநிலப் போட்டிகளில் பங்கேற்கவும் உள்ளனர். 

ரூபாய் 25000 மதிப்புள்ள  மிதிவண்டி 
 மற்றும் ரூபாய்  5000 மதிப்பிளான விளையாட்டு உபகரணங்களை ஆசிரியர்களும் உதவும் காரங்களும் இணைந்து வழங்கினர்,

வைஸ்ணவ் என்பவர் இரண்டு கணினிக்காண உபகரணங்களை வழங்கினார்.

 இது போன்று கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளிக்கு  கணினி ஆய்வக உபகரணங்கள், கழிப்பறை வசதி ,சுற்றுச்சுவர் வசதி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை உதவும் கரங்களும்  முன்னாள்  மாணவர்களும் ஏற்படுத்தி கொடுத்தால் மாநில அளவில் மட்டும் நின்று விடாமல் உலக அளவில் பல சாதனைகளை படைத்திடலாம் என்கிறார் தலைமை ஆசிரியர் ராஜசேகரன்..

"உங்களின் ஓர் சிறிய உதவியும் நிச்சயம் சாதனை படைக்கும்" தாங்களும் அரசுப்பள்ளிக்கு  உதவிட :9965515675. 

மாநில அளவிளான போட்டிகளின் பங்கேற்கும் எங்கள் மாணவச் செல்வங்களை ஊக்குவிக்கும் விதமாக பலரும் உதவிகரம் நீட்ட முன் வந்துள்ளனர்.
பள்ளியில் பணிபுரியும் பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகரன்
 , உதவித் தலைமை ஆசிரியர்கள் நாராயணசாமி, அய்யாக்கண்ணு மற்றும் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தீனதயாளன் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் முனியப்பன், செந்தில் வடிவு, சத்திய ஜோதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும்  பாராட்டினர் .அதோடு நீன்றுவிடாமல் மாநில போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பரிசு மழையும் குவியத் தொடங்கின.

உதவியவர்கும் இனி உதவிக்கரம் நிட்டும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றார்  திண்டுக்கல் மாவட்ட கோ.இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ..

சாதனைகள் மட்டும் அரசுப்பள்ளியின்  நோக்கம் அன்று பலரின் சாதனைகளை வெல்வது அரசுப்பள்ளியின்  பள்ளியின் இலட்சியம்..

SOURCE:சைக்கிளிங் போட்டி.. தங்கம் வென்ற அரசு பள்ளி தங்கங்கள்.. சபாஷ் போடுங்க வாங்க!
 
 

Share this

1 Response to "தங்கம் வென்ற அரசு பள்ளி தங்கங்களுக்கு குவிந்த பாராட்டுகளும் ..! பரிசுப் பொருட்களும்..!"

Dear Reader,

Enter Your Comments Here...