பெண் குழந்தைகளுக்கான மாநில விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

பெண் குழந்தைகளுக்கான, மாநில விருது பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சமூக நலத் துறை சார்பில், வீரதீர செயல் புரியும், 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, 'மாநில விருது' வழங்கப்படுகிறது. தேசிய பெண் குழந்தை தினமான, ஜன., 24ல், விருது வழங்கப்படும். 


விருது பாராட்டு பத்திரத்துடன், ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்படும். அடுத்த ஆண்டு, தேசிய பெண் குழந்தை தினத்தில், மாநில விருது பெற, தகுதியான சிறுமியரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல் துறை, தொண்டு நிறுவனங்கள் தொடர்புடைய அலுவலர்கள் வாயிலாக, உரிய முன்மொழிவுகளுடன், மாவட்ட சமூக நல அலுவலரிடம், நவ., 30க்குள் விணணப்பிக்கலாம்.

Share this

0 Comment to " பெண் குழந்தைகளுக்கான மாநில விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...