Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

#அறிவியல்-அறிவோம்: மினரல் வாட்டர் &RO குடிநீர் குடிக்கலாமா?

நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு சாதனங்களை வைத்திருக்கிறோம்.இந்த R.O சாதனத்தில் மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும். அதை உதறி தட்டினால் அதிலிருந்து மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும். நாம் என்ன நினைப்போம்...அப்பப்பா நல்ல வேளை, இந்த வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று. ஆனால் உண்மை என்னவென்றால்  இந்த தாதுப் பொருட்கள்  மனிதர்களின் உடம்பில் செல்லவில்லை நிச்சயமாக அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைக்க வேண்டும். கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து எடுத்துக் கீழே கொட்டுகிறோமே!. அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய தாதுப் பொருட்கள் ஆகும். நீங்கள் தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் உங்கள் கண்ணுக்கே தெரியாது. ஆர்.ஓ.சாதனத்தை பயன் படுத்தினால் மட்டுமே அந்தத்தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே...ஆனால் கொத்து பரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச் சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு ஆர்.ஓ வில் ஊற்றி வடிக்கச் செய்ய வேண்டும்.

யாருடைய வீட்டில் தண்ணீரை சுத்தம்செய்வதற்கு R.O மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே அசைக்க இயலாத உண்மை. தண்ணீரில் இருக்கும் அந்தத்தாதுப் பொருட்களை R.O செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
எனவே தண்ணீரை ஆர்.ஓ (R.O) செய்யக் கூடாது. தண்ணீரை R.O செய்து குடித்தால் மனிதனுக்கு நோய் வரும்.வாழ்நாள் முழுவதுமே தீராது.

மினரல் வாட்டர் -ஐ
பயன்படுத்தலாமா?

 மினரல் வாட்டர் பயன்படுத்தவே கூடாது. மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing Machine என்று ஒரு மெஷின் இருக்கும். இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக மாற்றுகிறது. 

எனவே நல்ல தண்ணீரை ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக மாற்றுவதற்கு நாம் பல வேலைகளை செய்து அதை பாட்டிலில் அடைத்துப் பணம் கொடுத்து வாங்கி குடிக்கிறோம். எனவே தயவு செய்து பாட்டிலில் அடைக்கப் பட்ட மினரல் வாட்டர் என்று அழைக்கப்படும் தண்ணீரில் உள்ள இயற்கையான சத்துகளே இல்லாத Packaged Drinking Water ஐ யாருமே பயன்படுத்தக் கூடாது.

மண்பானை, வெள்ளை பருத்தித் துணி,செம்பு என்ற தாமிர உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள் இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு R.O. சிஸ்டத்தை உபயோகிக்க வேண்டும்?.
 

(சீ.ஹரிநாராயணன்)
 




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive